;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (03.04.2018)

0

கல்வி சாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் நாளை முதல் முடிவு?

சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை அதிகரித்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 34 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சருடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைக்குட்படுத்த சுற்றறிக்கை ஒன்றை வெளியிடும் வரையில் தொடர்ந்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இன்று அந்த சுற்றறிக்கையை வெளியிட்டால் நாளை முதல் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக அச்சங்கத்தின் செயலாளர் எட்வட் மல்வத்த தெரிவித்துள்ளார்.

சுதந்திர கட்சியின் முடிவு பிரதமருக்கு அறிவிக்கப்பட்டது

ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முடிவு ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி கூறியுள்ளார்.

நேற்று இரவு ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவெடுத்திருந்தனர்.

நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின் போது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரே நிலைப்பாட்டில் இருப்பதற்கு இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை (04) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

ஜனாதிபதியுடன் கலந்துரையாடலை மேற்கொள்ள சம்பந்தன் வருகை

எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தற்போது ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலம் முன்றில் இரண்டு ​பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து திக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில விதிமுறைகள், நீதித்துறைக்கு இருக்கின்ற அதிகாரங்கள் அரசாங்கத்தால் பறிக்கப்படுவதாக அமைந்துள்ளது என்று மனுவில் கூறப்பட்டது.

இதேவேளை நீதிக்கட்டமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் வேறு சில தரப்பினரால் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் சட்டமூலத்துக்கு ஆதரவாகும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பாக இடம்பெற்று வந்த விசாரணையின் முடிவு பாராளுமன்ற சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சட்டமூலம் அரசியலமைப்பின் சில விதிமுறைகளை மீறுவதால், அந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அவசியம் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 × 5 =

*