;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (03.04.2018)

0

விரைவில் அனைத்து மாகாண ஆளுநர் பதவிகளிலும் மாற்றம்?..!!

அனைத்து மாகாணங்களுக்குமான ஆளுநர் பதவிகளில் மாற்றம் செய்யவுள்ளதாகவும், அதன்படி எதிர்வரும் 06ம் திகதி புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் அனைத்து மாகாண ஆளுநர்களையும் அழைத்து ஜனாதிபதி பேசியுள்ளதாகவும், அதன்படி விரைவில் இந்த மாற்றம் செய்யப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

ஒரு ஆளுநரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளுக்கு வரையறுக்கப்பட்டிருப்பததே இந்த மாற்றத்திற்கான காரணமாக அறியப்படுகிறது.

விமான நிலைய பணியாளர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

கட்டுநாயக்க விமான நிலைய பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக அத தெரண விமான நிலைய செய்தியாளர் கூறியுள்ளார்.

10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்க அரசாங்க தரப்பால் இணக்கம் தெரிவிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

1994ம் ஆண்டு முதல் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படுவதுடன், அதன்படி இந்த ஆண்டு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறி விமான நிலைய பணியாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

கொழும்பு நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சய்டமுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு பேரணி காரணமாகவே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பு

தேசிய கணக்காய்வு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.

காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக்க இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்பித்துள்ளார்.

கணக்காய்வு சேவை ஆணைக்குழுவின் அதிகாரம், பணிகள் மற்றும் கடமைகள் சம்பந்தமாக முறைப்படுத்துதல், தேசிய கணக்காய்வு அலுவலகம் மற்றும் இலங்கை கணக்காய்வு சேவையை ஸ்தாபித்தல், அரச நிதி சம்பந்தமாக கணக்காய்வாளரின் பொறுப்புக்களை சரியாக வகைப்படுத்தல் மற்றும் அது சம்பந்தமான விடயங்களை நெறிப்படுத்த திட்டமிடுதல் ஆகிய விடயங்களை இந்த சட்டமூலம் உள்ளடக்கியுள்ளது.

தலைவர்கள் அதிகரித்தால் தீர்மானம் எடுக்க முடியாது

நாட்டை நிர்வகிக்கும் தலைவர்கள் அதிகரித்தால் தீர்மானங்கள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும் என்றும் நாட்டின் தற்போதைய நிலை உக்கிரமடைவதற்கும் அதுவே காணரம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

கட்டான பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாட்டின் சில பிரதேசங்களில் ஏற்படுகின்ற சில சம்பவங்களால் நல்லிணக்கம் நம்மிடம் இருந்து தூரமாகின்றதாகவும், ஒருவகையில் இவற்றுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இவ்வாறான நிலமைகள் ஏற்படுவதற்கு காரணம் தீர்மானம் எடுக்க முடியாத நிலையே அல்லது தீர்மானம் எடுப்பதற்கு அளவுக்கு அதிகமானவர்கள் இருப்பதே என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு என்ன நடக்கும் என்பது தொடர்பில் அனைவரும் தௌிவாக உள்ளதாகவும், 04ம் திகதி இரவு 09.30 மணிக்கு அதன் பெறுபேறு வௌியாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − nine =

*