;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (03.04.2018)

0

சிகரெட் கொண்டு வந்தோருக்கு அபராதம்

சட்ட விரோதமாக சிகரெட் தொகையொன்றை நாட்டுக்குக் கொண்டுவந்தோம் என்ற குற்றத்தை ஒப்புக்கொண்ட மூவருக்கு மீனுவங்கொடை நீதவான் நீதிமன்று இன்று அபராதம் விதித்தது.

ஒருவருக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் அபராதம் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்தச் சந்தேகநபர்கள் வத்தனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்கள் கொண்டு வந்த சிகரெட் தொகையை அரசுடமையாக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

புதிய யாழ்.கொன்சியூலர் வடக்கு ஆளுநருடன் சந்திப்பு

புதிதாக பொறுப்பேற்றுள்ள யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் எஸ்.பாலசந்திரன், வடக்கு மாகாண ஆளுநர் ரெயினோல்ட் குரேரைவச் சந்தித்தார்.

இதுவரை காலமும் கொன்சியூலராகப் பதவி வகித்த ஆ.நடராஜன், புதுடில்லிக்குப் பதவி உயர்வு பெற்று சென்ற நிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்துக்கு கொன்சியூலராக பாலசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய கடற்படைத் தளபதி ஆளுநருடன் சந்திப்பு!!

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படைக் கட்டளைத் தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் ரெயினோலட் குரேவை ஆளுநர் செயலகத்தில் இன்று சந்தித்தார்.

சிநேக பூர்வமான இந்தச் சந்திப்பின் போது வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது என அறியமுடிகிறது.

புதிய படைத்தளபதி பதவியேற்பு!!

காலாட் படையணியின் 9 ஆவது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, பனாகொடையில் அமைந்துள்ள படைத் தலைமையகத்தில் இன்று பதவியேற்றார்.

புதிதாக பதவியேற்பிற்கு வருகை தந்த படைத் தளபதியை 14 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரல்ப் நுகேரா மற்றும் காலாட் படையணியின் பிரதி கட்டளை அதிகாரி கேர்ணல் அநுர திசாநாயக வரவேற்று சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதை படையணியினால் வழங்கப்பட்டன.

படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, தலைமையகத்தில் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிகளுக்கு சென்று நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − 13 =

*