;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (04.04.2018)

0

ரணிலுக்கு எதிராக வாக்களிக்கும் அமைச்சர்கள் பதவி நீக்கப்படலாம்?

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்படலாம். அதன் பின்னர் புதிய அமைச்சரவை மாற்றம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

ரணிலுக்கு எதிரான ஊர்வலம் நாடளுமன்றை அண்மிக்கிறது!!

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம் இன்று நாடாளுமன்றைச் சென்றடையும்.

கிரிபத்கொடவிலிருந்து ஆரம்பமான ஊர்வலத்தை ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி என்பன இணைந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்துள்ளன.

”சர்வதிகார நண்பர்களை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்த ஊர்வலத் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மனசாட்சிப்படி வாக்களியுங்கள் – மைத்திரி கோரிக்கை!!

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக மற்றொரு முறைப்பாடு!!

தொழிலாளர் தினக் கொண்டாட்ட தினம் மாற்றப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா தொழிலாளர் காரியாலயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விசாக பூரணை வாரத்தை முன்னிட்டு, பௌத்த மகாசங்கத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, தொழிலாளர் தினத்தை மே மாதம் 7ஆம் திகதி கொண்டாட அரசு தீர்மானித்துள்ளது.

இந்த விடயமானது தொழிலாளர்களின் உரிமைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று ஆசிரியர் சங்கம் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*