;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (04.04.2018)

0

நாடாளுமன்றிலிருந்து வெளியேறினார் மகிந்த!!

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிகையில்லாத் தீர்மானம் தொடர்பான விவாதம் காலை 9 மணிக்கு ஆரம்பமாகியது. மதிய இடைவேளையின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்றுக்கு வருகை தந்த மகிந்த ஒரு மணி நேரம் மட்டுமே நாடாளுமன்றில் இருந்தார் என்று கூறப்படுகிறது.

ரணிலுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை எவரும் மறுக்கவில்லை- உதய கம்பன்பில!!

தலைமை அமைச்சர் ரணிலுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை என்று எந்தவொரு உறுப்பினரும் குறிப்பிடவில்லை – என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் முகத்தில் மாற்றமில்லை!!

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் சகல உறுப்பினர்களுடனும் சகஜமான முறையில் சிரித்தவாறு கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் பரபரப்பாக நாடாளுமன்றில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக ஆகியோருடன் சிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆசனம் ஆசனமாகச் சென்று பேசிக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

சுசில் பிரேமஜயந்தவின் உரையால் மன்றில் குழப்பம்!!

அர்ஜுன மகேந்திரனை கொண்டு வந்தது யார்? அவருக்கு ஆதரவு வழங்கியது யார்? என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் அடுக்காகக் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் நாடாளுமன்றில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது எனத் தெரியவருகிறது.

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த அணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று மன்றில் சமர்ப்பித்தார். தீர்மானம்மீதான இந்த விவாதம், இன்று இரவு 9.30 மணிக்கு முடிவடையும். அதன் பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − ten =

*