;
Athirady Tamil News

நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பான செய்தித் துணுக்குகள்..!!

0

மகிந்த உட்பட 54 பேர் ரணிலுக்கு எதிராக வாக்களிப்பர்- உதய கம்மன்பில..!!

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக வாக்களிப்பர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

தலைமை அமைச்சர் ரணில் விக்ரம சிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ரணிலுக்கு பாலித ஆதரவு!!

தலைமை அமைச்சர் ரணில் விக்ரம சிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விவாதத்துக்கு வருகை தராத அமைச்சர்கள்!!

போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க ஆகியோர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பிலான விவாதத்தில் இதுவரை பங்கேற்கவில்லை.

விவாத இறுதியில் இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறவுள்ள வாக்கெடுப்பிலும் அவர்கள் கலந்து கொள்வது சந்தேகம் என்று தெரிவிக்கப்படுகிறது.

ரணில் பதவி விலக வேண்டும்- ரமேஷ் பத்திரண எம்.பி.

நம்பிக்கையில்லாத் தீர்மான வாக்கெடுப்புக்கு முன்னதாக தலைமை அமைச்சர் பதவி விலக வேண்டும் – மகிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரண சற்றுமுன்னர் தெரிவித்தார்.

தலைமை அமைச்சர் ரணில் விக்ரம சிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தீர்மானத்துக்கு எதிராகவுள்ளது கூட்டமைப்பு- அமைச்சர் ராஜித!!

தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிராகவுள்ளது – என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சுசில் பிரேமஜயந்தவின் உரையால் மன்றில் குழப்பம்!!

அர்ஜுன மகேந்திரனை கொண்டு வந்தது யார்? அவருக்கு ஆதரவு வழங்கியது யார்? என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் அடுக்காகக் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் நாடாளுமன்றில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது எனத் தெரியவருகிறது.

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மகிந்த அணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இன்று மன்றில் சமர்ப்பித்தார். தீர்மானம்மீதான இந்த விவாதம், இன்று இரவு 9.30 மணிக்கு முடிவடையும். அதன் பின்னர், வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

மகிந்த அணியினரின் முகத்தில் ஈயும் ஆடவில்லை- ஹர்ஷ டீ சில்வா கிண்டல்!!

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத் தொடர்பான விவாதம், நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் கலந்து கொண்டுள்ள, மகிந்த அணியினரின் முகங்கள் சந்தோஷமின்றிக் காணப்படுகின்றன என்று இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பில் தனது டுவிட்டர் கீச்சகத்தில் பதிவொன்றை இட்டுள்ள இராஜாங்க அமைச்சர், மகிந்த அணியின் முக்கியஸ்தர்கள் சிலர், சபையில் அமர்ந்துள்ள ஒளிப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − four =

*