;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (05.04.2018

0

’நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தாலும் வெற்றியே’

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தமையும் ஒரு வெற்றியே என முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபஷ தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர் நாடாளுன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்த வெளியிட்ட அவர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் வாக்களித்திருந்தால் பெறுபேற்றில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் 54 பேரின் ஆதரவே பிரேரணைக்கு காணப்பட்டதாகவும், எனினும், அது வாக்களிப்பின்போது 76 ஆக அதிகரித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடரும்; ஜனாதிபதியுடன் வெள்ளி சந்திப்பு

தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றிரவு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் பிரதமர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

“நாங்கள் சில உறுப்பினர்களை இழந்துள்ளோம், எனினும் எஞ்சியிருக்கும் உறுப்பினர்களுடன் தேசிய அரசாங்கம் தொடர்ந்து பயணிக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புப் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்பதோடு, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

’அரசாங்கத்துக்கு ஒத்துழைப்போருடன் புதிய பயணம் தொடரும்’

அரசாங்கத்துடன் ஒத்துழைத்துப் பணியாற்ற விரும்பும் அணைவருடனும் இணைந்து, புதிய பயணமொன்றைத் தொடர்வதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிகொத்தயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் வைத்து, இன்று (05) அறிவித்தார்.

பிரதமருக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமைக்கு, இதன்போது நன்றி தெரிவித்த அவர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், ஐ.தே.கவில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய முகங்களை முன்கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதியளித்தார்.

தமது பயணத்தைத் தொடர்வதற்காக, புதிய நம்பிக்கையொன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நம்பிக்கையினூடாக, புதிய பயணத்தை, மிக இலகுவாகத் தொடர முடியுமென்றும் கூறினார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து வெற்றிபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்கும் வகையில், சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி சார்ந்த அனைவரும் இன்று கூடியிருந்ததோடு, அங்கு வந்திருந்த அனைவருக்கும், பாற்சோறு, பலகாரங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − one =

*