;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (05.04.2018)

0

ஜனாதிபதிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாக இதன்போது பேசப்பட்டுள்ளது.

இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவிடம் அத தெரண வினவிய போது, எந்த நேரத்திலும் அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதற்கு தான் உள்ளிட்ட குழு தயார் என்று கூறினார்.

இதுதவிர நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஏற்கனவே கையொப்பமிட்ட போதிலும் நேற்றைய வாக்களிப்பில் கலந்து கொள்ளாத பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவிடம் அத தெரண வினவியதற்கு, ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுபடுவதை தவிர்க்கும் நோக்கில் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்று கூறினார்.

தேசிய பாதுகாப்பு நிதியம் – திருத்த சட்டமூலம் பராளுமன்றத்திற்கு

தேசிய பாதுகாப்பு நிதியம் சம்பந்தமான திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சபை முதல் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர பிரதேச சபை திருத்த சட்டமூலமும் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இந்த சட்டமூலமும் சபை முதல் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கல்­விப் பணிப்­பா­ளர்­க­ளின் தெரிவு – கால தாமதம்!!

வடக்கு மாகா­ணத்­தில் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி , தீவ­கம் ஆகிய வல­யங்­க­ளில் கல்­விப் பணிப்­பா­ளர்­கள் ஓய்வு பெற்­றுச் செல்­லும் காலம் தெரிந்­தும் குறித்த காலத்துக்குள் உரிய நிய­ம­னங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை என கல்­வி­யா­ளர்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

இலங்­கை­யின் ஏனைய மாகா­ணத்­தில் உள்ள வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர்­கள் ஓய்வு பெறும் காலத்­திற்கு 3 மாதங்­க­ளிற்கு முன்பே விளம்­ப­ரப்­ப­டுத்தி அதற்­கான விண்ணப் பங்­கள் கோரப்­பட்டு நேர்­மு­கப் பரீட்­சை­க­ளும் இடம்­பெற்று ஓய்வு பெற்­றுச் செல்­லும் அதி­கா­ரி­யி­டம் இருந்து புதிய அதி­காரி பொறுப்­பெ­டுப்­ப­தா­கவே பணி­கள் இடம்­பெ­று­கின்­றன.

இருப்­பி­னும் இந்த நடை­மு­றை­யா­னது வடக்கு மாகா­ணத்­தில் மட்­டும் இன்­று­வரை காலம் கடந்த பணி­யா­கவே காணப்­ப­டு­கின்­றது. இந்த விட­யம் தொடர்­பில் வடக்கு மாகாண சபை உரிய கவ­னம் செலுத்­து­வ­தன் மூலம் மட்­டுமே கல்­வி­யில் ஏற்­ப­டும் தொய்வு நில­மை யைச் சீர் செய்ய முடி­யும் என சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது.

இதே­நே­ரம் இனி­வ­ரும் காலங்­க­ளில் ஓய்வு பெற்­றுச் செல்­ல­வுள்ள அதி­கா­ரி­கள் தொடர்­பி­லா­வது கல்வி அமைச்சு கவ­னம் செலுத்­து­வ­தன் மூலம் தற்­போ­தைய நில­மையை சீர் செய்ய முடி­யும்.

நடப்­பாண்­டின் யூன் மாதத்­து­டன் மடுக் கல்வி வல­யப் பணிப்­பா­ள­ரும், நவம்­பர் மாதத்­தி­ல் மன்­னார் வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ரும் ஓய்வு பெற்­றுச் செல்­ல­வுள்­ள­தோடு டிசம்­பர் மாதம் வட­ம­ராட்சி வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ரும் ஓய்வு பெற்­றுச் செல்­ல­வுள்­ள­னர்.

இதே­நே­ரம் அண்­மை­யில் ஓய்வு பெற்­றுச் சென்ற யாழ்ப்­பா­ணம் வல­யக் கல்­விப் பணிப்­பா­ள­ரின் வெற்­றி­டத்­திற்­கான நேர்­மு­கப் பரீட்சை நேற்றைய தினமே இடம்­பெ­ற­த் தீர்மானிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*