;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (05.04.2018)

0

தீவக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஆலோசனைக் கூட்டம்

தீவகம் வடக்கு ஊர்காவற்றுறைப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் பிரதேசத்தின் கைத்தோழில் சார் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் மருதயினார் ஜெயகாந்தன் தலைமையில் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தின் கைத்தொழில் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளும், ஆரம்பக் கைத்தொழிலமைச்சுப் பிரதிநிதிகளும், நெக்டா நிறுவன பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

திஸ்ஸ அத்தநாயக்க வெளிநாடு செல்ல அனுமதி

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.

களனிப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் சங்கம், அவுஸ்திரேலிவாவில் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இம்மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா​வுக்கு சென்றுவர அனுமதி வழங்குமாறு திஸ்ஸ அத்தநாயக்க நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தார்.

இந்த கோரிக்கைக்கு அரச தரப்பால் எதிர்ப்பு தெரிவிக்கப்படாத காரணத்தால் அந்தக் காலத்தில் அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அவரின் கடவுச்சீட்டை விடுவிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் வௌிநாட்டில் இருந்த வந்த பின்னர் மே மாதம் 07ம் திகதிக்கு முன்னர் கடவுச்சீட்டை மீண்டும் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி காலத்தில் தவறான ஆவணம் ஒன்றை தயாரித்து, அதனை ஊடகங்களுக்கு வௌியிட்டமை தொடர்பில், திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஐ.தே. க மறுசீரமைப்புக்கு கண்காணிப்பு ​சபை

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முன்னர் கூறியதற்கமைய, ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் 7,8 ஆம் திகதிகளில் முழுமையாக நிறைவு செய்யப்படும் அதேவேளை, இதற்காக கண்காணிப்பு சபை ஒன்றை அமைக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

63 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

வெல்லவாய- வெஹேரகல பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கி, சுற்றுலாச் சென்றிருந்த 63 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக சுகயீனமுற்ற நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்று (04) இரவு உணவு உண்டதன் பின்பே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவருகிறது.

வெல்லவாய- வெஹேரகல, மகா வித்தியாலய மாணவர்களே, சுகயீனமுற்ற நிலையில் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரணிலின் உருக்கமான பதிவு!!

மகிந்த அணியினரால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தவர்கள், வாக்களிப்பதனை புறக்கணித்தவர்கள் என அனைவருக்கும் தனது முகநூல் ஊடாக தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், கஷ்டமாக காலங்களில் எனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி. நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த உறுப்பினர்கள் மற்றும் வாக்களிப்பதனை புறக்கணித்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

2015ஆம் ஆண்டு நாம் பெற்றுக் கொண்ட வெற்றியைத் தொடர்ந்து நடத்தி செல்வதற்காக நமது நாட்டின் மத மற்றும் இன சமூகங்களுடன் இணைவது மகிழ்ச்சியான விடயமாகும். அவதூறு, தவறான பரப்புரை மற்றும் மூட நம்பிக்கைகளை பரப்பி கொண்டிருந்த தரப்பினரை தோல்வியடைய செய்வதற்கு, பல்வேறு மத சடங்குகள் செய்த அனைவருக்கு மற்றும் கடந்த காலங்களில் ஆதரவு வழங்கி ஆசி வழங்கி வாழ்த்து தெரிவித்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்து கொள்கின்றேன்.

எங்கள் வெற்றியை சமாதானம், ஒற்றுமை, அபிவிருத்தி மற்றும் நீதியை உறுதி செய்யும் வேலைத்திட்டத்தை மேலும் வலுவாக முன்நோக்கி கொண்டு செல்வதற்காக பயன்படுத்த வேண்டும்” என்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one + 4 =

*