;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (05.04.2018)

0

முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் கைது

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் தாக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் பிரித்தானிய பிரஜை காயம்

கொஸ்கொட பிரதேசத்தில் மோட்டார் சைக்களில் வந்த இரண்டு இனந்தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு பிரித்தானிய பிரஜை உள்ளிட்ட .இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காரில் பயணித்த இருவரே காயமடைந்துள்ளதோடு, அவர்கள் தற்போது நாகொட வைத்தியசாலையில் சிகிச்பைப்பெற்று வருவதாக கொஸ்கொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானிய பிரஜையான மொஹமட் இஸ்மாயில் மற்றும் அதுருவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சமன் பெரேரா ஆகியோரே இந்த துப்பாக்கிச் சூட்டில் காயடைந்துள்ளனர்.

காயமடைந்த, சமன் பெரேரா பல கொலைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குறித்த பிரித்தானிய பிரஜை இவருடன் வியாபாரத் தொடர்புகளை பேணி வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாடசாலை நேரங்களில் தனியார் வகுப்புகளுக்குத் தடைவிதிக்க தீர்மானம் ; அகில விராஜ் காரியவசம்

வார நாட்களில் பாடசாலை நடைபெறும் காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கவுள்ளேன். அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையில் பாடாசலையின் ஊடாக இரு தடவையே தோற்ற முடியும். எனினும் தனிப்பட்ட முறையில் எத்தனை தடவை வேண்டுமானாலும் பரிட்சார்த்திகளுக்கு தோற்ற முடியும். உயர் கல்வி அமைச்சுதான் இதனை தீர்மானிக்கும். என்றாலும் வெள்ளம் உட்பட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்கள் இரண்டாவது தோற்றிய போது அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் மூன்றாவது தடவையும் மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து முடியும் .

அத்துடன் தற்போது நாம் பாடசாலை ஆசிரியர்களின் பற்றாகுறை நிவர்த்தி செய்து வருகின்றோம். பல ஆசிரியர்கள‍ை இணைத்துள்ளோம். இந்நிலையில் தனியார் வகுப்புகள் குறித்து அவதானம் ச‍ெலுத்த வேண்டும். தனியார் வகுப்புகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. பாடசாலை மட்ட கல்வியை ஊக்குவிப்பதற்கு நாம் அவதானம் ச‍ெலுத்தியுள்ளோம். இதன்பிரகாரம் வார நாட்களில் பாடசாலை நடைபெறும் காலை 7.30 மணி தொடக்கம் 1.30 வரையான நேரத்தில் தனியார் வகுப்புகளுக்கு தடை விதிக்கவுள்ளேன். அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பேன் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 14 =

*