;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (06.04.2018)

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை..!!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்டத்தில் மாற்றங்கள் தேவை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (06) நடைபெறுகின்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை பலம் மிக்கதாக மாற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு..!!

அரசாங்கத்தை பலம் மிக்கதாக மாற்றுவதற்கு பாராளுமன்றில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (06) நடைபெறுகின்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை வாகனம்..!!

இலங்கையில் முச்சக்கர வண்டிக்கு பதிலாக நான்கு சக்கர வாகனம் ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ளது.மோட்டார் வாகன சட்டமூலத்திற்கான 3 உத்தரவுகளுக்கு நேற்று நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது.

2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக நான்கு வாகனம் ஒன்றை இலங்கை சட்டத்திற்குள் உள்ளடக்குவது, அந்த வாகனங்களை அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதிக்காமை, மோட்டார் வீடு என்ற பெயரில் புதிய வாகன கட்டமைப்பு அறிமுகப்படுத்தி வைத்தல் ஆகியவை இதற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக் அபேசிங்கவினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 10 =

*