;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (06.04.2018)

0

சிறுபோக உரமானியம் இன்று நள்ளிரவு முதல் அமுல்..!!

இன்று நள்ளிரவு முதல் சிறுபோக விவசாயிகளுக்கான உர மானியம் அமுலுக்கு வர உள்ளதாக விவசாயத் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறினார்.

அதன்படி சிறுபோக நெல் செய்கைக்காக 50 கிலோ கிராம் உரம் 500 ரூபாவுக்கு வழங்கப்பட உள்ளதுடன், ஏனைய விவசாய பயிர்களுக்காக 1500 ரூபாவாகவும் வழங்கப்பட உள்ளதென்று அவர் கூறினார்.

நவீன் திஸாநாயக்க அச்சுறுத்தியதாக திலங்க சுமதிபால முறைப்பாடு..!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் பின்னர், அமைச்சர் நவீன் திஸாநாயக்க தமக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து, பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார்.

அமைச்சர் நவீன் திஸாநாயக்க, தன்னை தகாத வார்த்தைகளின் திட்டியதாகவும், பிரதி சபாநாயகர் பதவிலிருந்த தன்னை விலகுமாறு அச்சுறுத்தியதாகவும், அவர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

மே 7இல் தேசிய விடுமுறை..!!

இம்முறை மே தினம், எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம், தேசிய விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நடவடிக்கை எடுத்துள்ளார்.

வெசாக் பௌர்ணமி வாரம் காரணமாக, மே மாதம் 1ஆம் திகதி வரும் மே தினம், 7ஆம் திகதி கொண்டாடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty + eleven =

*