;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (07.04.2018)

0

புத்தாண்டை முன்னிட்டு விஷேட புகையிரத சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி இன்று முதல் விஷேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 17ம் திகதி வரை இந்த சேவை முன்னெடுக்கப்படும் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.

இன்று காலை முதல் கொழும்பு கோட்டையில் இருந்து பண்டாரவளை மற்றும் மஹவை வரை குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் விஷேட புகையிரத போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு கோட்டை மற்றும் மருதானையில் இருந்து காலி, மாத்தறை வரையிலும், கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலும் விஷேட புகையிரத சேவைகள் பல ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று எதிர்வரும் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரையில் மா்தறையில் இருந்து மருதானை வரையிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரையிலும் மற்றும் பண்டாரவளை மற்றும் காலியில் இருந்து கொழும்பு வரையிலும் விஷேட புகையிரத போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷின் சகாக்கள் நால்வர் கைது

பிரபல பாதாள உலக குழுத் தலைவன் அங்கொட லொக்கா மற்றும் மாகந்துரே மதுஷின் சகாக்கள் என்று அறியப்படும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கை !

பிரதமரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிற்கு எதிராக ஐக்கியதேசிய கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தால் அவர்கள் பொது எதிரணியுடன் இணையக்கூடிய அபாயம் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமரிற்கு எதிராக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக ஐக்கியதேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி சிறிசேனவை சந்தித்தவேளையே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கைவிடுமாறு சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்தால் அதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிளவுபடும் மேலும் கட்சியின் உறுப்பினர்கள் பொது எதிணியுடன் இணையக்கூடும் எனவும் ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக பொதுஎதிரணி ஆட்சியமைக்ககூடிய சூழல் உருவாகலாம் என சிறிசேன எச்சரித்துள்ளார்.

அவ்வாறான நிலை உருவானால் தன்னால் எதுவும் செய்ய முடியாதநிலை உருவாகலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் மங்கள சமரவீர ஹரின் பெர்ணான்டோ அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் தனக்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி சிறிசேன, ஏன் அவ்வாறான நிலையில் அமைச்சரவையில் இருக்கவேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணிலின் வேண்டுகோளுக்கிணங்க பிரேரணை வாபஸ்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்களிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விலக்கிக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டதன் பின்னரே அந்த பிரேரணை விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான முடிவுகள் எதனையும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்திலேயே எடுக்கவேண்டும் என பிரதமர் அறிவுறுத்தியுள்ளார் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையளித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கட்சியின் தீர்மானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ள பிரதமர், எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் கருத்தின் காரணமாக இந்த விவகாரம் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen + eighteen =

*