;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (07.04.2018)

0

அமைச்சர்கள் தொடர்பில் திங்களன்று தீர்மானம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக அல்லது எதிராகச் செயற்பட்டவர் தொடர்பிலான தீர்மானம், அடுத்து நடைபெறவுள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (06) தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரரேரணைக்கு வாக்களித்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், அமைச்சர்களை நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியிலால் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக, வினவியபோது, அவர் தனக்கு அவ்வாறு மனு சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறினார்.

“எந்தவொரு மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை. திங்கட்கிழ​மை, சு.கவின் மத்தியக் குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது, இது தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

கடும் காற்றால் பல பகுதிகளில் சேதங்கள்

எட்டியாந்தோட்டைப் பகுதியில், நேற்று மாலை கடும் காற்றுடன் பெய்த மழையால் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் எக்கிலாஸ் , பனாவத்தை , களனி , கரவனெல்லை ஆகிய பிரதேசங்களில் மரங்கள் விழுந்து சேதங்கள் ஏற்பட்டதுடன் மின்சாரத் தடையும் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது

தேங்காய் பிடுங்க மரத்தில் ஏறியவர் மருத்துவமனையில்

தேங்காய் பிடுங்க மரத்தில் ஏறிய குடும்பத்தர் தவறி வீழந்து காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சாவகச்சேரி, மறவன்புலவு மேற்கில் இடம்பெற்றது.

காயமடைந்தவர் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டடு, சிகிச்சையின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளர்களின் ஆர்பாட்டத்திற்கு தீர்வு

அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொண்டு வந்த பணிநிறுத்தப்போராட்டத்திற்குத் தற்காலிக தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர்கள்இன்று முதல் பணிக்குச் செல்வதற்கு தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது

இந்தப்பேச்சுவார்தையில் தொழிலாளர் தேசிய சங்கம் சார்பாக மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சிங்.பொன்னையா, சோ.ஸ்ரீதரன், இந்தச்சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் ஆகியோரும் அக்கரப்பத்தனை பெருந்தோட்டக்கம்பனியின் பிரதி பொதுமுகாமையாளர் ரஜீவபண்டார, டொரிங்டன் தோட்ட முகாமையாளர் சின்னா, உதவி தோட்ட அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

டொரிங்கடன் தோட்டத்தொழிலாளர்கள் சிலருக்குத் தோட்ட நிர்வாகத்தினால் தொழிலாளர்களிடத்தில் முன்னெடுக்கும் நிர்வாக கெடுபிடிகள் போன்றனவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் கடந்த ஒருவாரகாலமாக பணி நிறுத்தம் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடதக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 18 =

*