;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (07.04.2018)

0

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் தேவையில்லையாம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றங்கள் செய்யாதிருக்க பெரும்பான்மையான கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் இந்த மாற்றம் தேவையில்லை என்று தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் உயர் பதவிகளில் மாற்றங்களை செய்வது தொடர்பாக பரிந்துரைகளை வழங்குவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அந்தக் குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள் 11 பேரும் அந்தக் கட்சியின் 03 பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.

தம்மை பதவி நீக்குமாறு ஶ்ரீ.சு.க உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதியிடம் கோரிக்கை

தமது பதவிகளில் இருந்து தம்மை நீக்குமாறு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

கடிதம் ஒன்றின் மூலம் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

நீரில் மூழ்கி மூவர் பலி : ஒருவரை காணவில்லை!!!

கண்டி – பன்வில, ஹூலு கங்கையில் நீராடச் சென்ற நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு ஒருவரை காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போயுள்ளவரை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் முன்னெடுத்துள்ளனர்.

டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள்

வயாவிளான் மத்தியகல்லூரியில் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் வே.த.ஜயந்தன் அவர்களின் தலைமையில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து இந்தப் பணியை மேற்கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen − two =

*