;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (08.04.2018)

0

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு.!

மலையகத்தில் நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பெய்த அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்று நீரின் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதனால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று இன்று திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நீண்டநாள் வரட்சியின் பின் நீரேந்தும் பிரதேசங்களுக்கு கன மழை பெய்ததனால் ஒரு சில நீர்தேக்கங்களின் நீர் மட்டம் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.

இந்த மழை காரணமாக கெனியன், லக்ஷபான, விமலசுரேந்திர, மவுஸ்ஸாக்கலை ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்தை புறக்­க­ணிப்­ப­தற்கு முடிவு!!

தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்த சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் அமைச்­ச­ர­வை­யில் இருக்­கும்­ வரை அமைச்­ச­ர­வைக் கூட்­டங்­க­ளில் பங்­கேற்­கா­தி­ருக்க முடிவு செய்­தி­ருப்­ப­தாக ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யி­லுள்ள அமைச்­சர்­கள் ரணி­லி­டம் கூறி­யுள்­ள­னர்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் உள்ள 6 அமைச்­சர்­கள் உள்­ளிட்ட 16பேர் நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரித்து வாக்­க­ளித்­தி­ருந்­த­னர். அவர்­களை நீக்­கு­மாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேரில் சந்­தித்­த­போது கோரி­யி­ருந்­தார்.

அதற்கு அரச தலை­வர், சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­களை நீக்­கு­வ­தா­னால், ஐக்­கிய தேசி­யக் கட்சி அமைச்­சர்­க­ளை­யும் நீக்­க­வேண்டி இருக்­கும் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்த நிலை­யில், சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­க­ளில், தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு தெரி­வித்த ஆறு அமைச்­சர்­கள் அமைச்­ச­ர­வைக்­குப் பிர­வே­சித்­தால் அந்­தக் கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­ந­டப்பு செய்­வ­தற்கு, ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யில் உள்ள அமைச்­சர்­கள் தீர்­மா­னித்­துள்­ள­னர். கொழும்பு அர­சி­ய­லில் இது புதிய சிக்­க­லைத் தோற்­று­வித்­துள்­ளது.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் முடிவு நாளை!!

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மான விவ­கா­ரத்­தில் இரண்­டா­கப் பிள­வு­பட்­டுள்ள சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, கூட்டு அர­சில் தொடர்­வதா? இல்­லையா? என்­பது தொடர்­பில் முடிவு எடுப்­ப­தற்­காக கொழும்­பில் நாளை அதன் மையச் செயற்­கு­ழு­வைக் கூட்­ட­வுள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் தனித்து ஆட்சி அமைக்க எந்­தக் கட்­சிக்­கும் பெரும்­பான்மை இல்லை என்­றும், அர­சைப் பலப்­ப­டுத்த அனைத்து நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அழைப்பு விடுப்­ப­தாக அரச தலை­வ­ரும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தி­ருந்­தார்.

இருப்­பி­னும், நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு வழங்­கிய சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் உறுப்­பி­னர்­கள் 16பேரும், கூட்டு அர­சி­லி­ருந்து வெளி­யே­ற­வேண்­டும் என்று கட்­சி­யின் தலை­மைக்கு அழுத்­தம் கொடுத்து வரு­கின்­ற­னர்.

கொழும்­பில் நாளை இடம்­பெ­றும் மையக் குழுக் கூட்­டத்­தில் இந்த விட­யம் தீவி­ர­மாக ஆரா­யப்­ப­டும். ஏற்­க­னவே சுதந்­தி­ரக் கட்சி மைத்­திரி அணி, மகிந்த அணி என்று இரண்­டா­கப் பிள­வு­பட்­டுள்ள நிலை­யில், நாளைய மையக் கூட்­டத்­தில் ஒரு­மித்த முடிவு எடுக்­கப்­ப­டா­விட்­டால், சுதந்­தி­ரக் கட்­சி­யில் மேலும் பிளவு ஏற்­ப­டும் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*