;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (08.04.2018)

0

க.பொ.த.சா/த பெறுபேறுகளை மீள் திருத்தம் செய்யும் கால அவகாசம் நீடிப்பு.!

கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சையின் பெறுபேறுகள் மீள் திருத்தம் விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்தது.

இந்த நிலையில், குறித்த காலத்தை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நீடிப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளகடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்களுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

பரீட்சையின் பெறுபேறுகள் மீள் திருத்தம் விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைய இருந்தது.

இந்த நிலையில், குறித்த காலத்தை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நீடிப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பின் சில பகுதிகளில் கடும் வாகன நெரிசல்.!

பன்னிப்பிடிய தர்மபால கல்லூரியின் பேரணி ஒன்று காரணமாக ஹைலெவல் வீதி – பன்னிப்பிடிய தொடக்கம் ஹோமாகம நோக்கிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

புது வருடத்துக்கு முன்னர் மாற்றம்.!

எதிர்வரும் தமிழ் சிங்களப் புது வருடத்துக்கு முன்னர் அமைச்சரவை மறுசீரமைப்புச் செய்யப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் நேற்று இரவு இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தலைமையில் ’தேசிய புத்தரிசி விழா’

நாட்டின் மாபெரும் விவசாய விழாவான ‘தேசிய புத்தரிசி விழா’ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரசித்திபெற்ற ஜயஸ்ரீ மகா போதியில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

சம்பிரதாயபூர்வமாக சிறுபோகத்தின்போது அறுவடை செய்யப்பட்ட அரிசியை ஜயஸ்ரீ மகா போதிக்கு தானம் செய்யும் விழா அடமஸ்தானாதிபதி சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச நாயக்க தேரரின் ஆசிர்வாதத்துடன் விவசாய அமைச்சு மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தினூடாக 51ஆவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மன்னர் ஆட்சிகாலம் முதல் இடம்பெற்றுவரும் இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள பெருமளவு விவசாயிகள் கலந்துகொண்டதுடன், உரிய காலத்தில் மழை கிடைக்கவும் நாடு விவசாயத்துறையில் செழித்து விளங்கவும் விவசாய துறையில் நாடு தன்னிறைவடைந்து சுபீட்சமான பொருளாதாரம் கிடைக்கவும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் பிரார்த்தனை இடம்பெற்றது.

புத்தரிசி விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி, முதலில் ஜயஸ்ரீ மகா போதியை வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டதுடன், புத்தரிசி விழாவில் இணைந்துகொண்டார்.

நச்சுத்தன்மையற்ற உள்நாட்டு அரிசிப் பாத்திரம் ஜனாதிபதி அவர்களினால் பாரம்பரிய முறைப்படி சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கு பூஜை செய்யப்பட்டது.

வேடர்கள் தலைவர் ஊறுவரிகே வன்னிலா எத்தனோவினால் சம்பிரதாயபூர்வமாக ஜயஸ்ரீ மகா போதிக்கு தேன் பூஜைக்கான தேன் பாத்திரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கை தேசிய விவசாய சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதுடன் அனைத்து மாகாணங்களை உள்ளடக்கும் வகையில் அந்தந்த மாகாணங்களுக்குரிய விதை நெல் விவசாயிகளுக்கு ஜனாதிபதியினால் பகிர்ந்தளிக்கப்பட்டது.

விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவினால் குத்தரிசி விழா தொடர்பான நினைவுச் சின்னம் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − four =

*