;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (08.04.2018)

0

மே மாதம் வெளியிடப்படவுள்ள இலங்கையின் புதிய வரைபடம்..!!

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவாறு அமைக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைபடமானது மே மாதம் வெளியிட்டு வைக்கப்படுமென நிள அளவையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், அதனை அச்சிடுவதற்கான வேலைகள் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படுமென, நிய அளவையாளர் திணைக்களத்தின் பணிப்பாளர் பீ.என்.பீ. உதயகாந்த தெரிவித்துள்ளார்.

விபத்தில் 6 பேர் காயம்

தனமல்வில – வெல்லவாய பகுதியில் ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (08) காலை, பஸ் ஒன்றும் மரக்கறிகள் ஏற்றி​ செல்லும் லொறியொன்றும் மோதி கொண்டதில் விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 6 பேரையும் தனமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாச் சென்ற ஐவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கண்டி – பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையில் மூழ்கிய ஐவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீரில் மூழ்கிய நால்வர் நேற்றைய தினம் உயிரிழந்திருந்ததோடு, காணாமற் போயிருந்த ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஐந்தாவது சடலமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்து சுற்றுலாச் சென்ற மூன்று பெண்கள் உட்பட 05 பேர் ஹூலு கங்கையில், களு பாலத்திற்கு அருகில் நேற்று மாலை நீராடிக் கொண்டிருந்துள்ளனர்.

இந்நிலையில் ஐவரும் ஆற்றில் மூழ்கியதையடுத்து பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து நான்கு பேரின் சடலங்களை நேற்றைய தினம் கண்டெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ள விடயம்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ந்தும் வேலைகளை முன்னெடுத்து செல்ல முடியாது என ஐக்கிய தேசிய கட்சி உத்தியோகபூர்வமாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆலயத்தில் துப்பாக்கி மீட்பு

மட்டக்களப்பு அமிர்தகழியில் ஆலய வளாகத்திலிருந்து துப்பாக்கியொன்று நேற்று மீட்கப்பட்டது எனப் பொலிஸார்.

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தீர்த்தக் குளத்தை சீரமைக்கும் பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்தத் துப்பாக்கி மீட்கப்பட்டது.

ஒரு பாடத்­தில்­ கூட சித்­தி­ய­டை­யா­தோர் வடக்­கி­லேயே அதி­கம்!!

2017ஆம் ஆண்டு கல்­விப் பொதுத்­த­ரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைப் பெறு­பே­று­ப­க­ளின் அடிப்­ப­டை­யில் நாடு முழு­ வ­தி­லும் 7 ஆயி­ரத்து 308பேர் சகல பாடங்­க­ளி­லும் சித்­தி­ய­டை­யத் தவ­றி­யுள்­ள­னர். வடக்கு மாகா­ணத்­தில் மாத்­தி­ரம் 623பேர் சகல பாடங்­க­ளி­லும் சித்­தி­ய­ டை­யத் தவ­றி­யுள்­ள­னர்.

இது பரீட்­சைக்­குத் தோற்­றி­யோ­ரில் 3.46 சத­வீ­த­மா­கும். தேசிய ரீதி­யில், சகல பாடங்­க­ளி­லும் சித்­தி­ய­டை­யத் தவ­றி­ய­வர்­கள் பட்­டி­ய­லில் வடக்கு மாகா­ணமே முத­லி­டத்­தில் உள்­ளது.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் 339பேரும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் 127பேரும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் 84பேரும், வவு­னியா மாவட்­டத்­தில் 47பேரும், மன்­னார் மாவட்­டத்­தில் 26பேரும், சகல பாடங்­க­ளி­லும் சித்­தி­ய­டை­யத் தவ­றி­யுள்­ள­னர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*