;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (08.04.2018)

0

மலிக் சமரவிக்ரம இராஜினமா.!

அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான மலிக் சமரவிக்ரம தனது பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானம்?

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் குறைந்த விலையில் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாழ்க்கைச் செலவு குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

ரொட்டவெவ கிராமத்தில் 15 வீடுகளுக்கு அடிக்கல்!!

ரொட்டவெவ கிராமத்தில் வீடு இல்லாத 15 குடும்பங்களுக்கு புதிய வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் சேறுவில தொகுதி அமைப்பாளர் அருண சிறிசேன தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ரொட்டவெவ மஸ்ஐிதுல் ஹூதா ஐூம்ஆ பள்ளி வாசல் பேஷ் இமாம் எம்.நஸார்தீன் , ருகோணமலை மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் முகாமையாளர் மற்றும் கிராமமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்க நவடிக்கை

இலங்கை மின்சார சபையின், பொறியியலாளர்கள் இரண்டு வாரங்களுக்குள் தொழிற்சங்க நவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

நீண்டகால மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில், தாம் முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து இலங்கை மின்சார சபை எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, மின்சார சபை, பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் செளமிய குமாரவடு தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை, நீண்டகால மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவுவதில் அக்கறையின்மையை காட்டுவதாகவும், இலாப நோக்கில் செயற்படும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஊடாக மின்சாரத்தை கொள்வனவு செய்து மின்சார சபை அதிகாரிகள் ஆதாயமீட்டுவதாகவும் செளமிய குமாரவடு குற்றம்சாட்டியுள்ளார்.

இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி திட்டமானது இலங்கைக்கு பொறுத்தமானதாக அமையுமெனவும், அதனை அடிப்படையாகக் கொண்டு மின்விநியோக திட்டமொன்றை தயாரிக்குமாறு வலியுறுத்தியும, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் செளமிய குமாரவடு மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் விசாரணை

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் குறித்து கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம், 582 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும், குறிப்பாக கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துதுறை ஆகிய மாவட்ங்களிலேயே அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் அதிகார சபையின் தலைவர் மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார்.

1929 என்ற விசேட இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பிலேயே விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் நிலையங்களில், சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் ஒத்துழைப்புடன் விசேட பிரிவொன்றை ஸ்தாபித்து விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த முறைப்பாடுகளில் சிலவற்றை விசாரணை செய்வதற்கான அதிகாரத்தை தொழில் திணைக்களத்திற்கு வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும், துஷ்பிரயோக சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக, திணைக்களம் உறுதியளித்துள்ளதாகவும் தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மரினி டி லிவேரா மேலும் தெரிவித்துளளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 5 =

*