;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (09.04.2018)

0

முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு தலை­மைத்­து­வப் பயிற்சி!!

பாது­காப்பு அமைச்­சின் கீழ் இயங்­கும் சிவில் பாது­காப்­புப் பிரி­வில் பணி­யாற்­றும் முன்­பள்ளி ஆசி­ரி­யர்­க­ளுக்கு 21 நாள் தொடர் தலை­மைத்­து­வப் பயிற்சி வழங்­கப்­ப­ட­வுள்­ளது. கிளி­நொச்சி மற்­றும் முல்­லைத்­தீவு மாவட்­டங்­க­ளில் பணி­யாற்­றும் முன்­பள்ளி ஆசி­ரி­யர்­கள் முல்­லைத்­தீவு தேரா­வில் இரா­ணுவ முகா­முக்கு இதற்­காக அழைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

‘சிவில் பாது­காப்­புப் பிரி­வி­ன­ரால் நடாத்­தப்­ப­டும் பண்­ணை­கள் மற்­றும் முன்­பள்­ளி­க­ளில் பணி­யாற்­றும் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பகுதி பகு­தி­யாக அழைக்­கப்­பட்டு இரா­ணு­வப் பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது. எம்மை பணி­யில் இணைக்­கும் போது இரா­ணு­வப் பயிற்­சி­கள் எது­வும் இல்லை என்று கூறி­னர். தற்­போது ராணு­வப் பயிற்­சிக்­காக அழைக்­கின்­ற­னர். எதிர்த்­துப் பேசி­னால் தொழில் இழக்க நேரும் என்­ப­த­னால் மௌனம் காக்­கின்­றோம்’ என்று தலை­மைத்­து­வப் பயிற்­சிக்­காக அழைக்­கப்­பட்ட ஆசி­ரி­யர்­கள் ‘உத­ய­னுக்­குத்’ தெரி­வித்­த­னர்.

எதிர்­வ­ரும் சித்­தி­ரைப் புத்­தாண்­டில் நாம் முகா­மில் இருக்க, எமது குடும்­பம் சோகத்­தில் இருக்­கும் நில­மையே ஏற்­ப­டும். உயிர்­வாழ உண­வுக்­காக தொழி­லிற்­குச் சென்ற நிலை­யில் தற்­போ­தும் அவல நில­மையே தொடர்­கின்­றது என்று குறிப்­பிட்­ட­னர்.

இவை மட்­டு­மன்றி இந்­தப் பயிற்­சிக்­காக அனை­வ­ரும் இரா­ணு­வச் சீருடை அணிந்தே செல்ல வேண்­டும் என்­ப­தற்­காக இரு சோடி சீரு­டை­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மகிந்­த­வின் பயண விவரங்­கள் இல்­லை­யாம்!!

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் வடக்­குக்­கான மற்­றும் வெளி­நா­டு­க­ளுக்­கான பயண விப­ரங்­கள் எவை­யுமே அரச தலை­வர் செய­ல­கத்­தில் இல்லை. அவை எங்கே இருக்­கின்­றன என்று தெரி­யாது. இவ்­வாறு அரச தலை­வர் செய­ல­கம் பதி­ல­ளித்­துள்­ளது.

2005ஆம் ஆண்டு தொடக்­கம் 2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி வரை­யி­லான காலப் பகு­தி­யில் ஆட்சி புரிந்த அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச, குறித்த காலப் பகு­திக்­குள் வடக்கு மாகா­ணத்­திற்கு எத்­தனை தட­வை­கள் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார், வெளி­நா­டு­க­ளுக்கு எத்­தனை தடவை பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார் என்ற விப­ரங்­க­ளை­யும், அந்­தப் பய­ணத் திக­தி­க­ளை­யும் வழங்­கு­மா­று­கோரி அரச தலை­வர் செய­ல­கத்­துக்கு தக­வல் அறி­யும் உரி­மைச் சட்­டத்­தின் ஊடா­கக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டது.

அரச தலை­வர் செய­ல­கத்­தின் தக­வல் வழங்­கும் அதி­காரி எஸ்.ரவிந்­திர தக­வல் கோரிக்­கைக்கு பதி­ல­ளித்­துள்­ளார். ‘முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் பயண விப­ரங்­கள் தொடர்­பான விப­ரங்­கள் எவை­யும் இந்த (அரச தலை­வர் செய­ல­கம்) பணி­ய­கத்­தில் இல்லை’ என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

இது தொடர்­பில் தக­வல் அறி­யும் உரி­மைக்­கான ஆணைக்­கு­ழு­வுக்கு மேன்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டது. கடந்த 3ஆம் திகதி ஆணைக்­கு­ழு­வில் விசா­ரணை நடை­பெற்­றது. அரச தலை­வர் செய­ல­கத்­தின் சார்­பில் அதி­காரி ஒரு­வர் ஆணைக்­கு­ழு­வில் முற்­பட்­டி­ருந்­தார்.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வின் பயண விப­ரங்­கள் எவை­யும் அரச தலை­வர் செய­ல­கத்­தில் இல்லை என்று குறிப்­பிட்­டார். அந்­தப் பயண விப­ரங்­கள் எங்கே இருக்­கின்­றது என்று அவ­ரி­டம், மேன்­மு­றை­யீடு செய்த ‘உத­யன் பத்­தி­ரி­கை­யி­னால்’ கேள்வி எழுப்­பப்­பட்டது. மேலும் பொது­மக்­க­ளின் பணம் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பய­ணங்­க­ளுக்­கான பணம் எப்­படி விடு­விக்­கப்­பட்­டது என்­றும் கேட்­கப்­பட்­டது.

அந்­தக் காலத்­தில் (2005 – 2015) பாது­காப்­புக் கார­ணங்­க­ளி­னால் அவ­ரது பயண விப­ரங்­களை வேறு தரப்­பி­னர், அதா­வது அவ­ரது பாது­காப்­புத் தரப்­பி­னர் கையாண்­டி­ருக்­க­லாம். அரச தலை­வர் செய­ல­கத்­தில் எந்­த­வொரு ஆவ­ணங்­க­ளும் இல்லை என்று பதி­ல­ளித்­தார் அரச தலை­வர் செய­ல­கத்­தி­லி­ருந்து முன்­னி­லை­யான அதி­காரி.

நிலையான மாற்றத்துக்காக மைத்திரி மந்திராலோசனை!!

கூட்­ட­ர­சின் அமைச்­ச­ர­வை­யில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, இந்த விட­யம் தொடர்­பில் தீவிர ஆலோ­ச­னை­க­ளில் ஈடு­பட்­டு­வ­ரு­கி­றார் என்று அர­சி­யல் வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து அறி­ய­மு­டி­கின்­றது.

இனி­வ­ரும் காலப்­ப­கு­தி­யில் மக்­கள் மனங்­களை வெல்­லும் வகை­யி­லான அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கா­க­வும், நாடா­ளு­ மன்­றம் கலைக்­கப்­ப­டும்­வரை இதே அமைச்­ச­ர­வையைத் தக்­க­வைத்­துக்­கொள்­ளும் நோக்­கி­லுமே அவர் இவ்­வாறு ஆலோ­சனை பெற்­று­வ­ரு­கி­றார் என­வும் தெரி­ய­வ­ரு­கின்­றது.

கூட்டு அரசு உத­ய­மா­ன­தி­லி­ருந்து இது­வ­ரை­யில் அமைச்­சர்­கள் தமது அமைச்­சு­க­ளின் ஊடாக செய்­துள்ள வேலைத்­திட்­டங்­கள், இடை­யி­டையே மேற்­கொள்­ளப்­பட்ட அமைச்­ச­ரவை மாற்­றத்­தின் பின்­னர் சம்­பந்­தப்­பட்ட அமைச்­சு­கள் வினைத்­தி­ற­னு­டன் செயற்­பட்­டுள்­ள­னவா என்­பது உள்­பட மேலும் பல விட­யங்­கள் தொடர்­பி­லும் அரச தலை­வர் மைத்­திரி ஆரா­ய­வுள்­ளார்.
இதற்­காக அமைச்­சு­க­ளின் செய­லாற்று அறிக்­கை­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்தி அது சம்­பந்­த­மாக தனக்கு அறிக்­கை­யொன்றை வழங்­கு­மாறு தனது செய­ல­ருக்­கும் பணிப்­புரை விடுத்­துள்­ளார்.

தமிழ், சிங்­க­ளப் புத்­தாண்­டுக்கு முன்­னர் அமைச்­ச­ரவை முழு­மை­யாக மறு­சீ­ர­மைக்­கப்­ப­டும் என்று மைத்­திரி தரப்­பில் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தா­லும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தால் கூட்டு அர­சில் அங்­கம் வகிக்­கும் சுதந்­தி­ரக் கட்சி இரண்­டு­பட்­டுள்­ளது.

கூட்­ட­ர­சில் அங்­கம் வகிப்­பதா அல்­லது இல்­லையா என்­பது சம்­பந்­த­மாக சுதந்­தி­ரக் கட்­சி­யின் முடிவு இன்­றி­ரவு வெளி­யா­க­வுள்­ளது. அதன் பின்­னரே புத்­தாண்­டுக்கு முன்­னரே அமைச்­ச­ரவை மாறுமா அல்­லது புத்­தாண்­டுக்­குப் பின்­னர் அது நடை­பெ­றுமா என்று இறுதி முடி­வெ­டுக்­கப்­ப­டும்.

அமைச்­ச­ரவை மாற்­றத்­துக்கு முன்­னர் அரச தலை­வர் மைத்­தி­ரிக்­கும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் இடையே சிறப்­புச் சந்­திப்­பொன்று இடம்­பெ­ற­வுள்­ளது. இதன்­போது முக்­கிய திணைக்­க­ளங்­க­ளைத் தனது கட்­டுப்­பாட்­டின்­கீழ் வைத்­தி­ருக்­கும் நிலைப்­பாட்டை ரணி­லி­டம் மைத்­திரி எடுத்­து­ரைப்­பா­ரென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இ.தொ.கா., ஈ.பி.டி.பி. ஆகி­ய­வற்­றின் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் அமைச்­சுப் பத­வி­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன. தனி­யாட்சி அமைப்­ப­தற்­கான பெரும்­பான்மை பிர­தான கட்­சி­க­ளி­டம் இல்­லா­த­தால் கூட்­ட­ரசு தொடர்­வ­தற்­கான அறி­கு­றி­களே தென்­ப­டு­கின்­றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 17 =

*