;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (09.04.2018)

0

கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை

கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை (10) நடைபெற உள்ளது.

நாளை பிற்பகல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை தொடர்ந்து கூட்டு எதிர்கட்சியினால் நடத்தப்படும் முதலாவது கலந்துரையாடல் இதுவாகும்.

எவ்வாறாயினும் இதில் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமைக்கான காரணம் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

O/L விடைத்தாள் மீள்திருத்த விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

கடந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் விடைத்தாள் மீள் திருத்த பணிக்கென விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலஎல்லை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே கொழும்பு கோட்டை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சந்தேகநபரான நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ கடந்த 6 ஆம் திகதி நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 2 =

*