;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (09.04.2018)

0

வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு உயர் கல்வி அமைச்சே காரணம்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உயர்கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனத் தெரிவிக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின், ஜயவர்தனப்புர பல்கலைக்கழகக் கிளை, இதனால் நாட்டின் முழு பல்கலைக்கழக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ள அந்த சங்கம், இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வினை உடனடியாக வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

இந்த தெழிற்சங்க நடவடிக்கைக் காரணமாக பல்கலைக்கழகங்களின் வழமையான கல்வி நடவடிக்கைகள் மாத்திரமன்றி, ஆய்வு நடவடிக்கைகளுத் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் டொக்டர்.நலீன் கனேகொட தெரிவித்துள்ளார்.

ஊழியர்களின் இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு முறையற்ற சில ஒப்பந்தங்களே காரணமெனவும், உயர் கல்வி அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன இந்த விடயத்தில் பொறுப்பற்று நடந்துகொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

கெகிராவ கஹகல்லப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருநு்து தேசிய உற்பத்தியிலான இரு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கிண்ணியா நகர சபைச் செயலாளர் பாகிஸ்தானுக்குப் பயணம்!!

கிண்ணியா நகர சபையின் செயலாளரான இலங்கை நிருவாக சேவையை சேர்ந்த என்.எம்.நௌபீஸ் நாளை பாகிஸ்தானுக்குப் பயணிக்கவுள்ளார்.

எதிர்வரும் 10 திகதி தொடக்கம் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள தென்னாசிய பொதுச் சுகாதாரம் தொடர்பான மாநாட்டில் பங்கு கொள்வதற்காக, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு நகர அபிவிருத்தி திட்டமிடல் அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையிலான உயர்மட்டக் குழுவினரும் பாகிஸ்தானுக்குப் பயணிக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 5 =

*