;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (09.04.2018)

0

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

கெகிராவ கஹகல்லப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை வைத்திருந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருநு்து தேசிய உற்பத்தியிலான இரு கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் எச்சரிக்கை!!

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நீர்நிலைகளை நோக்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்கு நீராடும் நடவடிக்கையில் ஈடுபடும் போது பாதுகாப்பாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பிரதேசங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நீர்நிலைகள் மற்றும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளது.

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீன்பிடி உபகரணங்கள் பயனாளிகளுக்கு கையளிப்பு

தென்மராட்சி பிரதேசத்தில் மீள்குடியமர்வு அமைச்சின் வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் கடந்த வருடம் மீன்பிடி உபகரணங்களுக்கு விண்ணப்பித்து தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் இன்று பிரதேச செயலகத்தில் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

ஒரு பயனாளிக்கு தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிக்கப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டது.

கடற்றொழிலாளர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு கடந்த வாரம் மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மீள்குடியமர்வு அமைச்சின் அதிகாரிகளால் ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து இன்று தென்மராட்சி பிரதேச பயனாளிகளுக்கு மீன்பிடி உபகரணங்கள் கையளிக்கப்பட்டன எனவும் ஏனைய பிரிவு பயனாளிகளுக்கு விரைவில் கையளிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

14 − 11 =

*