;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (09.04.2018)

0

வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் புதுவருடத்தின் பின்னர்…….

சீர்த்திருத்தப்பட்ட புதிய வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் அறவிடும் நடவடிக்கைகள் புதுவருடத்தின் பின்னர் அமுலுக்கு வரும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

33 வீதி ஒழுங்கு விதிமீறல்கள் தொடர்பான அபராதம் சீர்த்திருத்தப்பட்டு புதிய அபராத விபரம் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதற்கமைய அவற்றுள் 2 ஒழுங்கு விதி மீறல்களுக்கு முன்பு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்போது 6,000 மற்றும் 3,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த முச்சக்கர வண்டிகளுக்காக கட்டாய மீட்டர் கருவி பொருத்தல் மே மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையில் சம்பந்தனுக்கு இதை வழங்குங்கள்..!

எதிர்கட்சி தலைவர் பதவியில் இருந்துக் கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாக இரா. சம்பந்தனும் அவரது கட்சி சகாக்களும் செயற்படுகின்றனர். எனவே எதிர்கட்சி தலைவர் என்பதை விட புதிய அமைச்சரவையில் அமைச்சர் என்பது இவருக்க பொருத்தமாகவே காணப்படும் என பாராளுமன்ற உறுப்பிணர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தில் எதிர்கட்சி தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை நியமித்தமை பாராளுமன்ற பாரம்பரிய முறைமைகளுக்க முரணானதாகவே காணப்படுகின்றது. 2015ம் ஆண்டு தொடக்கம் பிரதமருக்கும் தேசிய அரசாங்கத்திற்கும் ஆதரவாக செயற்பட்டு அரசாங்கத்தின் பங்காளியாக எதிர்கட்சி தலைவர் இடம் பிடித்துள்ளமை எதிர்கட்சி பதவிக்கு எதிரானதாகவே காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் பதவியை தம்சப்படுத்திக் கொள்ளும் போட்டியை மஹிந்த தரப்பினர் மீண்டும் ஆரம்பித்துள்ளமை தொடர்பில் தெளிவுப்படுத்தும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மீன் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் மீன் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தைப் பணித்துள்ளார்.

சந்தையில் மோசடி வியாபாரிகளால் நுகர்வோர் சுரண்டப்படுவதைத் தவிர்ப்பது இதன் நோக்கமாகும்.

’பிரதமர் பதவிக்கான வாய்ப்பை நிராகரித்தேன்’ ராஜித

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில், தன்னை பிரதமர் பதவில் அமர்த்துவது தொடர்பில் வந்த முன்மொழிவினை தான் நிராகரித்ததாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அளுத்கமவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அதிகாரத்தில் உள்ள அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிபீடமேற்றுவதற்காக செயற்படுவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகள்; திருத்தம் விரைவில்

தமிழ் மற்றும் சிங்கள மொழியை அரச கரும மொழிகளாக்கும் வகையில் 21ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்காலத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அரச மொழிக் கொள்கையை மீறி செயற்படுகின்றமை தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்தல் மற்றும் மொழிப் பிரச்சினை தொடர்பில் கையாளும் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தீரமனாங்களை மேற்கொள்வார்கள் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 4 =

*