;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-7.!! (09.04.2018)

0

நாட்டின் பல பாகங்களில் மண்சரிவு அபாயம் ​

தொடர்ந்து மழை பெய்தால் எஹலியகொட, கிரிஎல்ல, அயகம, எலபத்த, குருவிட்ட, கொலன்ன மற்றும் தெஹியோவிட்ட போன்ற பகுதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கண்டி சம்பவம் தொடர்பில் இராணுவ ஊழியர்கள் இருவர் கைது

கண்டி, பூஜாபிட்டிய பகுதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இராணுவத்தில் சேவை புரியும் ஊழியர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தர்மசங்கடத்தில் ஜனாதிபதி

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு சார்பாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தர்மசங்கடமான நிலைக்கு தள்ளிவிட்டுள்ளனர். ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றிநை்தே நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

குருநாகல் வெலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கூட்டு எதிரணியினரின் நம்பிக்கையில்லா பிரேரணை பாரிய தோல்வியினை அடைந்துள்ளது. தேசிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தற்போது பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை தோற்றம் பெற்றுள்ளது. இவர்களின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாக இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையில் தற்போது கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரணிலை காப்பாற்றிய பெளசிக்கு கிடைத்த பரிசு; பீரிஸ் அம்பலப்படுத்தினார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதில் முன்னின்று செயற்பட்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசியின் பயன்பாட்டிற்கென 430 இலட்சம் பெறுமதியான சொகுசு வாகமொன்று அமைச்சரவை அனுமதியுடன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வெளிவிவார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொது{ன பெரமுணவின் ஏற்பாட்டில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இந்நிலையில் இதேபோல் பல்வேறு வரப்பிரசாதங்களைப் பெற்றுக்கொண்ட சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் இவ்வாறு எடுக்கப்படும் உறுதியற்ற தீர்மானங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையாது எனவும் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*