;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (10.04.2018)

0

எரிபொருள் விலைகள் தொடர்பில் மீண்டும் வெளியான அதிர்ச்சி தகவல்

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், அது எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இடம்பெறும் என்றும் கனிய வள அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் விற்பனையில் கனிய எண்ணெய் கூட்டுத் தாபனத்திற்கு நாளொன்றுக்கு 38 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வதற்கு சமாந்தரமாக, கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் விலையை நிர்ணயம் செய்வதற்கான விலை சூத்திரத்தை தயாரிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும்.

எவ்வாறிருப்பினும், இந்த விலை சூத்திரம் அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. உலக சந்தையில் எரிபொருளின் விலை தற்போது உயர் மட்டத்தில் உள்ளது.

இன்றைய நாளில் ப்ரேன்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67 அமெரிக்க டொலர்களாக
காணப்படுவதாக அறிக்கையிட்பட்டுள்ளதுடன், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோல் பீப்பாய் 76 டொலர்களாகவும், டீசல் பீப்பாய் 79 டொலர்களாகவும் விற்பனை செய்யப்பட்டுவருகிறது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் டீசல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவாகவும், பெற்றோல் ஒரு லீற்றர் ஒன்றின் விலையை 9 ரூபாவாகவும் அண்மையில் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் பயங்கர மழை; மக்களுக்கு கடும் எச்சரிக்கை

இலங்கையில் அடுத்துவரும் சில நாட்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் குறிப்பாக கிழக்கு, ஊவா மற்றும் வட மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்கு, வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். ஹம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு திருகோணமலை ஊடாக யாழ்ப்பாணம் வரையிலான கடற்கரையோரப்பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் 05 முதல் 15 வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது. இன்று நண்பகல் 12.11அளவில் கல்குடா, வெலிக்கந்தை, பொலன்னறுவை, அம்பன்பொல மற்றும் மதுரங்குளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும்.

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சியான செய்தி

இலங்கையில் அனைத்துப் பொருட்களும் தற்பொழுது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, நாடெங்கிலும் உள்ள சதொச விற்பனை நிலையங்களில் குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அதன் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் கலாநிதி எஸ்.எச்.எம். ஃபராஸ் தெரிவித்துள்ளார்.

எப்போதும் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் அமைப்பாக சதொச இருந்துவரும் நிலையில், இம்முறை பண்டிகைக் காலத்தில் ஆகவும் குறைந்த விலையில் பொருட்களை விநியோகிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்தக் கோரிக்கைக்கு அமைவாகவே, தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக கலாநிதி பராஸ் குறிப்பிட்டார்.

இதேவேளை, போதியளவு பொருட்கள் சதொச களஞ்சியசாலைகளில் கையிருப்பில் உள்ளதாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 52 ரூபாவிற்கும் ஒரு கிலோ சீனி 100 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் கலாநிதி பராஸ் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அவர்களால் மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னிட்டே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போட்டிகளுக்காக விண்ணப்பப் படிவங்கள் கோரப்பட்டுள்ளன

உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பவற்றினால் அரச ஊழியர்களுக்கான ஆக்கத்திறன் போட்டி தேசிய கலை இலக்கியப் போட்டி கையெழுத்துப் பிரதிப் போட்டி அரச ஓவிய சிற்பப்போட்டி ஆகிய போட்டிகளுக்காக பாடசாலை மாணவர்கள் கலைநிறுவனங்கள் கலைஞர்கள் அரச உத்தியோகத்தர்கள் அறநெறிப்பாடசாலை மாணவர்கள் ஆர்வலர்கள் ஆகியோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப்போட்டிகளுக்குரிய சுற்றுநிருபம் மற்றும் விண்ணப்பப்படிவம் என்பன கிளிநொச்சி மாவட்ட செயலக
கலாசாரப் பிரிவு மற்றும் கரைச்சி பூநகரி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக கலாசாரப்
பிரிவுகளில் பெற்றுக்கொள்ள முடியுமென கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight + 17 =

*