;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (11.04.2018)

0


யாழ்.மாநகர சபையின் கன்னி அமர்வு ஆரம்பம்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் கன்னி அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

​தொடர்ந்தும் மண்சரிவு அபாயம்

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றைய தினம் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உண்டு.

கடந்த சில தினங்களாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்படும்

இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனமானது, எரிபொருள் விலையை அதிகரிக்கக் கோரி, விலை சூத்திரப் பட்டியல் ஒன்றை அமைச்சரவைக்கு அனுப்பி வைத்துள்ளது.

அமைச்சரவையின் அனுமதியை பெற்றவுடன் இம்மாதத்திலிருந்து எரிபொருளுக்கான விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருளின் விலையை கட்டாயமாக உயர்த்த வேண்டும் என, பெற்​றோலிய வள துறை அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன்படி தமிழ் – சிங்கள புத்தாண்டு நிறைவடைந்த பின்னர், எரிபொருளுக்கான விலை அதிகரிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட கார் இறக்குமதிக்கு எதிராக மனு

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள, சிறிய ரக காரினை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக நுகர்வோர் உரிமையை பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு மற்றும் இதர சிவில் அமைப்புகள் இணைந்து இந்தியத் தூதரகத்திடம் மனு ஒன்றை கைளித்துள்ளன.

பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பான ‘Bajaj Qute RE60 quadricycle’ ரக கார்கள் பொதுமக்கள் பாவனைக்கு உகந்தவைகள அல்ல, என்ற அடிப்படையில் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த காரினை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்கனவே பாவனைக்கு உதவாத வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களினால் உயிரிழப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த வகையான கார்களை இறக்குமதி செய்வதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்குமென அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு இந்த காரினை இறக்குமதி செய்வதற்கு அனுமதி கோரி அனுப்பப்பட்ட விண்ணப்பத்திற்கு, மோட்டார் வாகன திணைக்களம் இதுவரை அனுமதியளிக்காமல் இழுத்தடிப்பு செய்வதற்கு இந்த காரின் தரமே காரணமெனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘Bajaj Qute RE60 quadricycle’ எனப்படும் இந்த காரில் 4 பேர் பயணிக்க முடியும். இந்தக் காரின் இயந்திரம் 200 சிசி திறன் கொண்டது. ஐந்து கியர்களுடன் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

காரும் அல்லாத, முச்சக்கர வண்டியும் அல்லாத (quadricycle) நான்கு சக்கர வாகனம் என்ற அடிப்படையிலேயே இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. எந்த வகையிலும் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத இந்த வாகனத்தை இந்தியா மூன்று வருடங்களுக்கு முன்னர் தடை செய்திருந்த நிலையில், அதனை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − three =

*