;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (11.04.2018)

0

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது

மனித கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் தங்காளை வீரகெட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காளை வலய விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபரை சோதனை செய்த போது அவரிடம் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது இரண்டு கொலைகள் மற்றும் துப்பாக்கியை காட்டி தங்க மாலை மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் ரண்ண பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை இல்லை

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் கூறியுள்ளது.

அவர்களின் சொந்த பணத்தில் செலவு செய்து அந்த கடமைகளுக்காக சென்றிருந்த போதிலும் இதுவரை அதற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை கவலைக்குறியது என்று அந்த சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜயசிங்க கூறினார்.

இது தொடர்பில் தேர்தல் திணைக்களத்திடம் வினவிய போது, அந்த ஆசிரியர்கள் வழங்கிய பற்றுச்சீட்டுக்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் அத தெரணவிடம் கூறினார்.

இந்த நிலமையை சீரமைத்து குறித்த கொடுப்பனவுகளை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் மேலும் கூறினார்.

புத்தாண்டு காலத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை.!

சித்திரைப் புத்தாண்டு நெருங்கும் வேளையில் புத்தாண்டுக்கு முன்னரும் புத்தாண்டு வேளையிலும், புத்தாண்டுக்குப் பின்னரும் அது குறித்துப் பாதுகாப்பு எச்சரிக்கையுடன் இருக்குமாறு கோரும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்களை பொலிஸார் பொதுமக்களுக்குத் தந்துள்ளனர்.

இது குறித்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பொலிஸ் பிரிவுகளிலும் பொதுமக்களுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளன.

பிரசுரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அப்பிரசுரங்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@ புத்தாண்டை ஒட்டிய காலப்பகுதிகளில் வீட்டை விட்டுச் செல்வதாயின் வீட்டுக் கதவு, சாளரம் (ஜன்னல்) போன்றவற்றை நன்றாகப் பூட்டி வைத்து விட்டுச் செல்லுங்கள்,

பணம், மற்றும் தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பெறுமதிமிக்க உடமைகளை பாதுகாப்பாக பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்,

பணக் கொடுக்கல் வாங்கல் செய்யும் நிறுவனங்கள், வர்த்தக வியாபார நிலையங்கள் ஆகியவற்றுக்கு வரும் நபர்கள் தொடர்பாக எந்நேரமும் விழிப்பாக இருங்கள்,

உங்கள் பயண வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கும்போது கூட பூட்டி வைத்து விட்டுச் செல்லுங்கள்,

ஏதாவது சம்பவங்கள், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள், நபர்கள் குறித்துத் தெரியவந்தால் தயக்கமின்றி, தாமதமின்றி உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கோ அல்லது பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அறிவித்துக் கொள்ளுங்கள்.

பண்டிகைக் காலத்தில் அறிமுகமான மற்றும் அறிமுகமில்லாத அதிகமானோரின் நடமாட்டங்கள், சனக் கூட்டம் அதிகமாக இருக்கும், அவ்வேளைகளில் நமது பணம், தங்க ஆபரணங்கள், பெறுமதியான உடமைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது.

மக்களின் பாதுகாப்பிற்காக பொலிஸார் என்றும் உங்களோடு இணைந்திருப்பார்கள்.” என்றும் அந்த விழிப்புணர்வுப் பிரசுரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*