;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (11.04.2018)

0

’இலங்கையின் சுகாதார சேவை உலகத்தரம் வாய்ந்தது’

இலங்கையின் சுகாதார சேவையானது ஆசிய நாடுகளில் மாத்திரமன்றி உலகலாவிய ரீதியில் தரம் வாய்ந்ததாக காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்டொக்டர் டெட்ரோஸ் அதநொம் ஜெப்ரயேசஸ் (Dr. Tedros Adhanom Ghebreyesus ) தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இலவச சுகாதார சேவை தரமானதாக அமைந்துள்ளமையே அதற்குக் காரணமெனக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் தலைவர்கள் சுகாதார சேவைக்கு தெளிவான வழிகாட்டல்களை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற உலக சுகாதார தின வைபவத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், இலங்கையானது குறை வருமான நாடாக இருந்ததாகவும் எனினும் தற்போது நடுத்தர வருமான நாடாக மாறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான சூழ்நிலையில் நாட்டின் இலவச சுகாதார சேவையானது தரமானதாக அமைந்துள்ளமையானது வளர்முக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

கைவிடப்பட்ட காரில் ஹெரோய்ன்; உரிமையாளரை தேடும் பொலிஸார்

தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் ஊடாக பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற காரிலிருந்து ஒருதொகை ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கார் கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த காரினை சோதனையிட்ட பொலிஸார், 56 கிராமும் 100 மில்லிகிராமும் நிறையுடைய ஹெரோய்ன் பொதியை கைப்பற்றியுள்ளனர்.

கார் தற்போது அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, காரின் உரிமையாளரை கண்டறியும் பொருட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

3 இரவுகள் மூடப்படும் மிருகக்காட்சி சாலை

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையானது 3 நாட்களுக்கு இரவு நேரங்களில் மூடப்படுமென, தேசிய மிருகக்காட்சி சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 13, 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் இரவு நேரங்களில் மிருகக்காட்சி சாலை மூடப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த 3 தினங்களும் காலை 8.30 மணியிலிருந்து மாலை 6 மணிவரை இதனைப் பார்வையிட முடியுமெனவும், திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கைவிடப்பட்ட காரில் ஹெரோய்ன்; உரிமையாளரை தேடும் பொலிஸார்

தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் ஊடாக பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற காரிலிருந்து ஒருதொகை ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கார் கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த காரினை சோதனையிட்ட பொலிஸார், 56 கிராமும் 100 மில்லிகிராமும் நிறையுடைய ஹெரோய்ன் பொதியை கைப்பற்றியுள்ளனர்.

கார் தற்போது அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, காரின் உரிமையாளரை கண்டறியும் பொருட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 + 9 =

*