;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (11.04.2018)

0

ஜனாதிபதியை வெவ்வேறாக சந்திக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள்

அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் வாக்களிப்பில் பங்கேற்காத ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் வெவ்வேறாக ஜனாதிபதியை சந்தித்துப் பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்பில் பங்கேற்காத ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஜனாதிபதி சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பின் பின்னர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்துப் பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு இன்று இரவு 07.00 மணியவில் இடம்பெற உள்ளதாக அமைச்சர் டப்ளியூ.டீ.ஜே செனவிரத்ன கூறினார்.

ஐ.தே.க மறுசீரமைப்பு குழுவின் முதலாவது கூட்டம் இன்று

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று மாலை கூடவுள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறினார்.

அந்தக் குழுவுக்கு 12 உறுப்பினர்கள் இரகசிய வாக்கடெுப்பு மூலம் கடந்த 08ம் திகதி தெரிவுசெய்யப்பபட்டு நியமிக்கப்பட்டதுடன், அந்தக் குழு முதல் தடவையாக இன்று மாலை கூடவுள்ளது.

அலரி மாளிகையில் இந்தக் கூட்டம் இடம்பெற உள்ளது.

அந்தக் குழுவில் அகிலவிராஜ் காரியவசம் உட்பட மங்கள சமரவீர, கயந்த கருணதிலக்க, நவீன் திஸாநாயக்க, ரஞ்சித் மததும பண்டார, ஹரின் பெர்னாண்டோ, ருவன் விஜேவர்தன, இரான் விக்கிரமரத்ன, அஜித் பி பெரேரா, ஜே.சி. அளவத்துவல, நலீன் பண்டார மற்றும் அசோக பிரியந்த ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய உறுப்பினர் சபை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்

அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்ககான வேதன அதிகரிப்பை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட அந்தக் கட்சியின் அரசியற்குழு உறுப்பினர், லால் காந்த, எதிர்வரும் மேதினத்திற்கு பின்னர், சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதியக் குறைப்பு ஆகியவற்றை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஒரு குடும்பத்தின் வாழ்க்கைச் செலவு, 6000 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

’10 வருடங்களில் கொழும்பு குடிசையில்லா நகராக மாறும்’

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களில் குறைவருமானம் பெறும் குடிசைகளிலும், தற்காலிக வீடுகளிலும் வாழும் மக்களுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 50 ஆயிரம் வீடுகளை அமைத்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியேற்றவுள்ளதோடு, அடுத்த சில வருடங்களில் இந்த செயற்றிட்டத்தை நிறைவுசெய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் இரண்டாம் மூன்றாம் கட்டங்கள் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்படும் பட்சத்தில், கொழும்பில் வீடில்லாப் பிரச்சினைக்கு முழுயான தீர்வு காணப்படுமெனவும், குடிசைகளில் வாழும் மக்களை அந்த வீடுகளில் குடியமர்த்தியப் பின்னர் அந்த இடங்களை வர்த்தக தேவைகளுக்காக பயன்படுத்த முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களை மையமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதோடு, மூன்று கட்டங்களும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் 10 வருடங்களில் கொழும்பில் உள்ள அனைத்து குடிசை வீடுககளும் அகற்றப்பட்டுவிடும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

முதற்கட்டமாக 2023ஆம் ஆண்டுக்குள் 50 ஆயிரம் வீடுகளை அமைத்து குறை வருமானம் பெறும் குடும்பங்களை அங்கு குடியமர்த்த எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 1 ஆம் திகதி விடுமுறை இரத்தாம்.!

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.

இவ்­வ­ருடம் ஏப்­ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்­ணமி என்­ப­தனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம் வெசாக் வார­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­மையை அடுத்து மே தின கொண்­டாட்­டங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்­ளது.

அதற்கமைய மே தின கூட்­டங்கள், ஊர்­வ­லங்கள் மே மாதம் 7 ஆம் திக­திக்கு பிற்­போ­டப்­பட்­டுள்ள நிலையில் அன்றைய தினத்தை வங்கி, அரச மற்றும் வர்த்­தக விடு­முறை தின­மாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 11 =

*