;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (12.04.2018)

0

பண்டிகைக் காலத்தில் பயணிகளின் நலன் கருதி விசேட பேருந்து சேவைகள்

பண்டிகைக் காலத்தில் பயணிகளின் நலன் கருதி 2,500 பேருந்து சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை போக்குவரத்துச் சபையும், பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இணைந்து 3,300 பஸ் சேவைகளை கடந்த சில நாட்களாக நடத்தியிருந்தன.

நேற்றும் 2,500 பேருந்து சேவைகள் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

நாட்டின் முக்கியமான நகரங்களில் இருந்து ஏனைய பாகங்களுக்கு பேருந்து சேவைகள் நடத்தப்படுகின்றன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு மேலதிக பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் எந்தவொரு பயணியும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை. எவரேனும் கூடுதலான கட்டணம் கேட்டால் தொலைபேசி வாயிலாக முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு 1955 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

24 மணித்தியாளங்களுக்குள் 100 மில்லி மீற்றர் மழை

மேற்கு, சப்ரகமுவ, தென், கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (12) மழை பெய்யக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் 100 மில்லி மீற்றர் மழை இப்பகுதிகளுக்கு பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அர­சி­லி­ருந்து வில­கி­னனர் சு.க.உறுப்பினர்கள்!!

ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரித்த, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் 16 உறுப்­பி­னர்­க­ளும் கூட்டு அர­சி­லி­ருந்து
வெளி­யே­று­வ­தாக நேற்று இரவு அறி­வித்­த­னர்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் நேற்று நடை­பெற்ற நீண்ட கலந்­து­ரை­யா­ட­லின் பின்­னர் இந்த முடிவை அறி­வித்­த­னர். சந்­திப்­பின் பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளுக்கு கருத்­துத் தெரி­வித்த, இரா­ஜாங்க அமைச்­சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன,

நாங்­கள் அர­சின் சகல பத­வி­க­ளி­லி­ருந்­தும் வில­கு­கின்­றோம். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் இதற்­கான அனு­ம­தி­யைப் பெற்­றுக் கொண்­டுள்­ளோம். எங்­க­ளின் சுய­ம­திப்பைப் பாது­காக்­கும் வகை­யில், ரணி­லுக்கு எதி­ராக வாக்­க­ளித்­தோம். நாங்­கள் 16பேரும், இன்­றி­லி­ருந்து (நேற்று) அர­சை­விட்டு வெளி­யே­று­கின்­றோம் -– என்­றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 + 13 =

*