;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (12.04.2018)

0

போலி நாணயத் தாள்களுடன் நபர் கைது

வவுனியா புதிய பஸ் தரிப்பிடத்துக்கு அருகில், யாழ்ப்பாணம் – வவுனியா நோக்கி செல்லும் பஸ் ஒன்றில் இருந்து, 1000ரூபாய் தாள் காசுகள் 45 ஐ வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரினால் ​நேற்றைய தினம் (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் கொகொலான பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும், இன்று (12) வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிதாக நியமனம் பெற்ற தூதுவர்கள், ஜனாதிபதி சந்திப்பு

புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இராஜதந்திரிகள் ஐவர் நேற்று பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்தனர்.

மொரோக்கோ, ஒஸ்திரியா, ஐக்கிய அரபு இராச்சியம், போலந்து மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புதிதாக நியமனம் பெற்றுள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களே தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

மொஹமட் மலிக்கி – மொரோக்கோத் தூதுவர் (Mr. Mohamed Maliki – Ambassador – designate of the Kingdom of Morocco)

பிரிக்கிட் ஒபிங்கர் வொல்க்சொபர் – ஒஸ்ரிய தூதுவர் (Mrs. Brigitte OppingerWalchshofer – Ambassador – designate of the Republic of Austria)

செய்க் அஹமட் ஹமாட் அல் முல்லா – ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் (Mr. Sheikh Ahmed Hamad Al Mualla – Ambassador – designate of the United Arab Emirates)

அடம் புராக்கெளஸ்கி – போலந்து தூதுவர் (Mr. Adam Burakowski – Ambassador – designate of the Republic of Poland)

இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் புதிய செயலாளராக காலி மாவட்டத்தின் முன்னாள் செயலாளரான எஸ்.டீ.கொடிகார நியமிக்கப்பட்டுள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் முன்னாள் செயலாளர் நீல் த அல்விஸ் ஓய்வுப் பெற்றுச் சென்றுள்ளமையால், அவரது வெற்றிடத்துக்கு கொடிகார நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், பெண்கள் மற்றும் சிறுவர் நடவடிக்கைள் அமைச்சின் புதிய செயலாளராக அசோக அலவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 16 =

*