;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (12.04.2018)

0

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் கைது செய்யப்பட்ட சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் ருவன்ஜீவ, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று (12) ஆஜர் படுத்தப்பட்ட போதே நீதவான் அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

2014 ஆம் ஆண்டின் இறுதி அரையாண்டுப் பகுதியில் 39 மில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் நிதி குற்றவியல் விசாரணை பிரிவினாரால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு அமைவாக அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அலோசியஸ் மற்றும் கசுனுக்கு 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஏப்ரல் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் விலை அதிகரிப்பு?

அரசாங்கம் பெரும் நஷ்டத்தின் மத்தியிலும் எரிபொருள் விலையை நிலைபேறாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஒரே தலைவர், ஒரே வேலைத்திட்டம், ஒரே அரசாங்கம் என்ற கோட்பாட்டின் கீழ் அரசாங்கம் எதிர்காலத்திலும் செயற்படும் தர்க்க ரீதியான விடய தானங்களின் அடிப்படையில், புதிய அமைச்சரவையை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் கேட்போர் கூடத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.

அரசாங்கம் பெரும் நஷ்டத்தின் மத்தியிலும் எரிபொருள் விலையை நிலைபேறாக பேணுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை மாற்றங்களை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மாத்திரம் குறைந்த விலையில் எரிபொருளை விநியோகித்தால் அரசாங்கம் 989 கோடி ரூபா நஷ்டத்தை எதிர்கொண்டது என்றும் சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப் பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

விசேட ரயில் சேவை ஆரம்பம்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இலங்கைப் ரயில்வே திணைக்களமானது 12 விசேட ரயில்களை சேவைகளை ஆரம்பித்துள்ளது.

அதற்கமைய, இன்றிலிருந்து குறித்த ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்புக் கோட்டையிலிருந்து, காலை 7.20 மணிக்கு பண்டாரவளை வரை குளிரூட்டப்பட்ட ரயில்கள் சேவை ஆரம்பமாகியுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து காலிக்கு இன்று காலை 6.50 இற்கும், கோட்டையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு காலை 10 மணிக்கும் இவ்வாறு விசேட ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

’ஐஸ்’ போதைப் பொருளுடன் பெண் கைது

சென்னையிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணொருவர் ஐஸ் எனப்படும் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதான குறித்த பெண்ணிடமிருந்து, இன்று (12) ​​அதிகாலை 212 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 17 =

*