;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (12.04.2018)

0

பல மாகாணங்களுக்கு மின்னல் தாக்கம் – எச்சரிக்கை..!!

மேல், சப்ரகமுவ, தென் , மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் கடும் மழையுடன் இடி மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டள்ளது.

மேலும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடும் மழை – ஹட்டன் நகர வீதிகள் நீரில் முழ்கின

மலையகப் பகுதியில் ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, வட்டவளை, மஸ்கெலியா, தலவாக்கலை ஆகிய பகுதிக்கு இன்று (12) மதியம் 2 மணி முதல் 4 மணி வரை பெய்த கடும் மழை காரணமாக போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, ஹட்டன் நகரப்பகுதியில் சில வீதிகள் நீரில் முழ்கியுள்ளன.

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மல்லியப்பு பகுதியில் நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியதனால் நீர் வெளியேறி வீதிக்கு செல்வதனால் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

நகரின் பாதைகளில் வெள்ள பெருக்கெடுத்ததுடன், நகருக்கு வருகைத்தந்தோர் திடீரென மழை பெய்தமையினால் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியிலும், ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், வீதி வழுக்கும் தன்மையாக இருப்பதனாலும் வாகன சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் செலுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

11 இளைஞர்கள் காணாமல் போன சம்பவம்: கடற்படையினருக்கு விளக்கமறியல்

கொட்டாஞ்சேனை பிர​தேசத்தில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் இருவரையும் எதிர்வரும், 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × 3 =

*