;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-5.!! (12.04.2018)

0

புதிய பாராளுமன்ற அமர்வு மே 8 ஆம் திகதி

இன்று (12) நள்ளிரவு முதல் நடைமுறையில் உள்ள பாராளுமன்ற அமர்வை முடிவுக்கு கொண்டுவந்து புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் அடுத்த பாராளுமன்ற அமர்வு மே 8 ஆம் திகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தை சிந்தித்து அடுத்த கட்ட வேலை திட்டங்கள் முன்னெடுக்கப்படும்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களும், ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களும் தன்னை சந்தித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல புதிய வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவது குறித்து கலந்துரையாடியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தலவத்துகொட லேக் விவ் ரெசிடென்சி வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்தும் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்காலத்தை நோக்கி சிந்தித்து அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் பின்னர் அடுத்த கட்ட வேலைத்திட்டங்களை துரிதமாக செயற்படுத்த முடியும். புதிய வழியில் முன்னோக்கி செல்ல முடியும் என நம்புவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

விமானப்படை தளபதியின் மனைவி சர்ச்சையில்!

இலங்கை விமானப்படை தளபதியின் மனைவி செயற்பாடு காரணமாக சர்ச்சைக்குரிய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படையினால் நடத்தப்படும் சிங்கள – தமிழ் புத்தாண்டு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

விமானப்படை எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தலைமையில் விமானப்படை தலைமையகத்தில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உணவு, உடை மற்றும் புத்தாண்டிற்கு அவசியமான பொருட்களை அந்த இடத்தில் காண முடிந்தது. இந்நிலையில் விமானப்படையினால் காபனிக் உரம் பயன்படுத்தி பயிரப்பட்ட மரக்கறிகள் இங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் தளபதியின் மனைவி அனோமா ஜயம்பதியும் அங்கு வருகைத்தந்திருந்தார். அவர் பின்னால் சென்ற விமானப்படை அதிகாரி ஒருவர், அவர் மீது வெயில் படாதவாறு குடை பிடித்து சென்றுள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 5 =

*