;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (13.04.2018)

0

​விபத்தில் இருவர் பலி – 7 பேர் காயம்

பொலன்னறுவ – மட்டக்களப்பு பிரதான வீதியின் வெலிகந்த பகுதியில் கப் வாகனம் ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சிக்கிய கண்டேனர் வாகனம்

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட 1000 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் போதைபொருட்களுடன் மஹரமக பகுதியில் கண்டேனர் வாகனம் ஒன்றை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை

இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மே 8 இல் புதிய பாராளுமன்ற அமர்வு

நடப்பு பாராளுமன்ற அமர்வை நிறுத்தி புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, நேற்று 12 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறையில் இருந்த பாராளுமன்ற அமர்வை நிறைவுக்கு கொண்டுவந்து புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலே ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் எட்டாவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அரசியல் யாப்பின் 70 ஆவது சரத்திற்கு அமைய பாராளுமன்றத்தின் முதல் அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அடுத்த அமர்வை கூட்டும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.

இந்த இடைவெளிக்குள் பாராளுமன்றத்தில் எதுவித பிரேரணைகளையோ, வினாக்களையோ சமர்ப்பிக்க முடியாது. பாராளுமன்றத்தின் சகல செயற்பாடுகளும் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

இறுதியாக கடந்த 2009 ஆம் ஆண்டு மே 17 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 14 =

*