;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (13.04.2018)

0

அடுத்த பாராளுமன்ற அமர்வில் எதிர்கட்சியுடன் அமர்வதாக எஸ்.பி திஸாநாயக்க அறிவிப்பு

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் எதிர்கட்சியின் ஆசனங்களில் அமர உள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கூட்டு எதிர்கட்சியுடன் ஒன்றிணைந்து மக்கள் ஆட்சியை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் மறுப்பறிக்கையை ஜனநாயக இளைஞர் இணையம் கண்டிக்கிறது

ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து ஜனநாயக இளைஞர் இணையம் வெளியேறியதை தொடர்ந்து ஜனநாயக மக்கள் முன்னணியானது இளைஞர் இணையத்தின் பெயரிலேயே இணையத்தின் செயற்குழுவால் இடைநிறுத்தப்பட்டுள்ள அதன் முன்னாள் செயலாளரினால் வெளியிட்டுள்ள மறுப்பறிக்கையை வன்மையாக கண்டிக்கிறது.

இது தொடர்பில் ஜனநாயக இளைஞர் இணையத்தின் பிரதித்தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது,

“ஜனநாயக இளைஞர் இணையம்” 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அதன் ஸ்தாபக அமைப்புச் செயலாளராகிய ஆனந்ததாஸ் சஜீவானந்தன் தற்போது தலைவராகவும், ஸ்தாபக செயலாளர் ஜெயப்பிரகாசம் நிரோஷ்காந்த் தற்போது பிரதித் தலைவராகவும், ஸ்தாபக நிதி செயலாளர் அருணாசலம் சிவசங்கர் தற்போது அமைப்புச் செயலாளராகவும் விளங்குகின்றனர்.

அதன் ஸ்தாபக தலைவர் சண்முகநாதன் பிரபாகரன் ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளராக இருந்து தற்போது கட்சியின் செயல்பாடுகளிலிருந்து விலகியுள்ளார்.

இச்சமயத்தில் இணையத்தின் ஸ்தாபகர்கள் ஜனநாயக இளைஞர் இணையம், இணையத்தின் செயற்குழுவுக்கு உரித்தானது என உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

மேலும், புது வருடத்தில் கூடவுள்ள செயற்குழு, பொருத்தமான புதிய செயலாளரைத் தேர்ந்தெடுக்கும்.

மேலும் இளைஞர் இணையத்தின் பெயிரில் வெளிவரக்கூடிய அறிக்கைகளை அதன் செயற்குழுவிடம் உறுதிப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பழ மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

கொட்டகலைப் பகுதியில் சீத்தாப் பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஆரம்பக் கைத்தொழில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்தின் வழிகாட்டலில், சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து பழமரச் செய்கையினை ஊக்குவிக்கும் வேலைத்திட்டதின் கீழ் பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

இதில், கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத், பிரதித் தவிசாளர் எம்.ஜெயகாந்த், ஆரம்பக் கைத்தொழில் பிரதி அமைச்சரின் பிரத்யேக செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் இ.தொ.காவின் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × 4 =

*