;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (14.04.2018)

0

அரமைச்சரவை மாற்றங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி!

அமைச்சரவையில் முழுமையான மாற்றங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறும் என அரச தலைவரின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நாளை மறுதினம் (15) பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு, எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளார். அதேவேளை அமைச்சரவையில் தற்காலிகமாக 4 அமைச்சர்கள் அரச தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் இன்று கனமழை பெய்யக்கூடும்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடமேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மாகாணங்களிலும் இன்று மாலை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் 100 மில்லிமீற்றரை தாண்டிய அடை மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்படுகின்றது.

மழை பெய்யும் நேரத்தில் 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.தே.க. தனித்து ஆட்சியமைக்க அனுமதியோம்! – வாசுதேவ கூறுகிறார்!!

ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கப்பட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் வார இறுதி ஊடகமொன்றுக்கு தொடர்ந்தும் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்துள்ளதாவது-

தலைமத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஐக்கிய தேசியக் கட்சி சிக்கியுள்ளது. இவ்வாறான ஓர் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் வழங்குவது நகைப்பிற்குரியது.

ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிறுகட்சிகளுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு 102 ஆசனங்களே உண்டு சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஆட்சி அமைக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும். சுதந்திரக் கட்சியின் ஆதரவு இன்றி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆட்சி அமைக்க முடியாது. – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + two =

*