;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (14.04.2018)

0

வீதியில் சமைத்து உண்ணும் உறவுகள்..!!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 421 நாளாகத் தொடர்கிறது.

இன்று புது வருடப் பிறப்பு நாளிலும் போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்காமல் வீதியோரத்தில் சமைத்து உண்ணும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பொருள்­க­ளின் விலை­கள் குறைப்பு!!

து­வ­ரு­டத்தை முன்­னிட்டு யாழில் உள்ள சதோசா நிறு­வ­னங்­க­ ளில் அத்­தி­யா­வ­சி­யப் பொருள்­க­ளின் விலை­கு­றைக்­கப்­பட்­டுள்­ளது. எதிர்­வ­ரும் 18 ஆம் திகதி வரை இந்தச் சலுகை இருக்­கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சிவப்பு நாடு 75 ரூபா,பிற­வுண் சீனி 115ரூபா,வெள்ளை சீனி 100ரூபா, பாசு­மதி அரிசி 120 ரூபா, கீரி­சம்பா 119 ரூபா வெங்­கா­யம் 52 ரூபா என்­கிற விலை­க­ளில் பொருள்­கள் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.வேறு சில பொருள்­க­ளின் விலை­க­ளும் குறைக்­கப்­பட்­டுள்­ளன.

அவநம்பிக்கைகளை நீறாக்கி நிறைவு தரட்டும் புத்தாண்டு

அவ நம்­பிக்­கை­களை நீறாக்கி தூய உயி­ரோட்­ட­மான வரு­ட­மாக விளம்பி வரு­டம் விளங்க வேண்­டும். இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அங்­க­ஜன் இரா­ம­நா­தன் தெரி­வித்­துள்­ளார்.

அவர் விடுத்­துள்ள புத்­தாண்டு வாழ்த்­துச் செய்­தி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அதில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது,

இரு­ப­தாம் நூற்­றாண்­டில் முப்­பது ஆண்­டு­கால போருக்­குப் பின்பு நிலை­யான சமா­தா­னத்­திற்­காக மீண்­டும் ஒரு பய­ணத்­தில் எமக்கே உரிய அடை­யா­ளங்­க­ளு­டன் தன்­னி­றை­வான அபி­வி­ருத்­தி­யு­டன் கூடிய உரி­மை­களைப் பெறு­வ­தற்­காக இந்த நூற்­றாண்­டின் தமிழ் சிங்­கள வரு­ட­மாக விளம்பி வரு­டம் அமைய வேண்­டு­மென எண்­ணு­கின்­றோம்.

நம்­பிக்­கை­யீ­ன­மா­ன­வர்­க­ளாக நாள்­களை நகர்த்­தா­மல் நாண­ய­மா­ன­வர்­க­ளாக நம்­பிக்­கை­யு­டன் ஒவ்­வொரு நாள்க­ளின் நகர்­வு­க­ளை­யும் நாம் முன்­னெ­டுக்க வேண்­டிய கால­சூ­ழல் கனிந்­துள்­ளது.

இலங்­கை­யர் ஒவ்­வொ­ரு­வ­ரி­ன­தும் வாழ்க்கை வட்­டத்­திலே பல்­வேறு அதிர்­வ­லை­கள் ஏற்­பட்­டுள்­ளது. அவை ஆன்­மீ­க­மா­கவோ, அர­சி­ய­லா­கவோ கூட காணப்­ப­ட­லாம். தப்பி பிழைத்­தல், தக்­க­ணப் பிழைத்­தல் என்ற மகு­டத்­திற்­கி­ணங்க நமது மக்­க­ளுக்­காக எமது ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­க­ளை­யும் நமது நலன் சாரா­மல் தந்­தி­ரோ­ப­ாயமான முறை­மை­யில் கொண்டு செல்ல வேண்­டும்.

பிறக்­கும் விளம்பி வரு­டத்­து­டன் எமது தூய நோக்­கப் பணி­கள் கரம் சேர்த்து நாட்­டுக்­காக கிரா­மத்­தி­லி­ருந்து நகர்­வு­களை ஆரம்­பிப்­போம் என்­­றுள்­ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − nine =

*