;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (14.04.2018)

0

ஒட்டுசுட்டானில் கட்டாக்காலிகள் தொல்லை!!

ஒட்­டு­சுட்­டான் பகு­தி­யில் கட்­டாக்­காலி கால்­ந­டை­க­ளால் சிர­மங்­க­ளை­யும் விபத்­துக்­க­ளை­யும் எதிர்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தாக மக்­கள் விச­னம் தெரி­விக்­கின்­ற­னர்.

கால்­ந­டை­யா­ளர்­கள் தமது கால் நடை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­தாது பகல் வேளை­க­ளில் விடு­வ­தா­லும் இர­வு­வே­ளை­க­ளில் பட்­டி­க­ளில் அடைக்­கா­மல் விடு­வ­தா­ லும் பல்­வேறு சிர­மங்­கள் மற்­றும் விபத்­துக்­கள் ஏற்­ப­டு­வ­தை­யும் தவிர்க்க முடி­யா­துள்­ளது.

இத­னால் வாக­னங்­க­ளில் பய­ணிப்­போர் மிக­வும் சிர­மத்­துக்குள்­ளா­கின்­ற­னர். இரவு வேளை­க­ளில் பாட­சா­லை­கள், வைத்­தி­ய­சா­லை­கள் மற்­றும் ஆலய வளா­கங்­கள் மற்­றும் சந்தை வளா­கங்­க­ளி­லும் தங்­கி­வ­ரு­வ­தால் இடங்­கள் அசுத்­தப்­ப­டு­வ­து­டன் சேத­ம­டைந்­தும் வரு­கின்­றன.

எனவே கால்­ந­டை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த கம­ந­லச் சேவை நிலை­யமோ அன்றி பிரதேசசபையோ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

தெற்கு அதிவேக பாதையில் கடும் வாகன நெரிசல்

தெற்கு அதிவேக பாதையின் 48 ஆவது கிலோமீற்றர் பகுதியில் ஏற்பட்ட விபத்து காரணமாக தெற்கு அதிவேக பாதையில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவிக்கின்றது.

விட்டுக் கொடுப்பு நிலவ திடசங்கற்பம் பூணுவோம்

காலகாலமாக ஒற்றுமையுடனும் பண்பாட்டு கலாச்சார விழுமியங்களை மதித்து வாழ்ந்து வருகிறோம். இவ்வாறு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான், தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

எமது மக்கள் மத்தியில் நம்பிக்கையும் விட்டுக் கொடுப்பும் தொடர்ந்தும் நிலவ நாம் எல்லோரும் திடசங்கற்பம் பூணுவோம்.

பன்மைத்துவ சமூகங்கள் வாழும் ஈழமணித் திருநாட்டிலும் உவகெங்கிலும் சமாதானம் சகவாழ்வுடன் அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ உழைப்போமாக.
இந்த புத்தாண்டில் எமதும் உலக மக்களினதும் வாழ்வு சிறக்க வாழ்த்துகிறேன்.

நிகழும் சிங்கள தமிழ் புத்தாண்டை கொண்டாடும் அனைத்து சிங்கள, தமிழ் மக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்றுள்ளது.

மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸ பிரதேசத்திற்குட்பட்ட வர்த்தகநிலையம் ஒன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞரின் சடலத்தை கலுபோவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − 9 =

*