;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (15.04.2018)

0

நாளை முதல் மேலதிக பஸ் சேவைகள்

புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு வருகை தருவதற்காக நாளை முதல் மேலதிக பஸ் சேவைகள் இடம்பெறும் என இலங்கை போக்குவரத்தின் சபையின் தலைவர் ரமால் சிறிவர்;த்தன தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் பிரதேச அலுவலங்கள் மூலம் எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் இந்த பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.பி.ஏ.ஹேமசந்திர கருத்து தெரிவிக்கையில் சொந்த இடங்களுக்கு சென்ற பொதுமக்கள் மீண்டும் திரும்புவதற்காக 23 ஆம் திகதி வரையில் மேலதிக பஸ் சேவைகள் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

உடவளவ நீர்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (15) காலை 10 மணியளவில் திறக்கப்படவுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என மகாவலி அதிகாரசபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

உயிரெடுத்தது சிகரெட்!!

பெற்றோல் போத்தலுடன் சிகரெட் புகைத்தவாறு பயணித் தவர் போத்தல் மூடி கழன்றதும் தீ பற்றிச் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் கிளிநொச்சி பாரதிபுரத்தில் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த இராசேந்திரம் றெனோல்ட் றீகன் (வயது – 34) என்ற குடும்பத் தலைவரே உயிரிழந்தார்.

அவர் வேலைதேடி மோட்டார் சைக்கிளில் கடந்த 16 ஆம் திகதி பயணித்துள்ளார். மூடி இல்லாத போத்தலில் பெற்றோல் கொள்வனவு செய்து சிகரெட் புகைத்தவாறு பயணித்தார். போத்தல் நழுவி விழ பெற்றோல் ஊற்றுண்டுள்ளது.

அதனை எடுக்கக் குனிந்தபோது வாயிலிருந்த சிகரெட் நெருப்புப்பட்டு தீ பற்றியது. அவரைது நெஞ்சு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளைிலும் தீ பற்றியது. கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார். சிகிச்சை பயனளிக்காது நேற்றுமுன்தினம் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் விசாரணை நடத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 1 =

*