;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (16.04.2018)

0

மஹிந்தானந்த அளுத்கமகே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில்

விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சினால் கெரம் போட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றம் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்னால் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தற்போது பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ளார்.

ஞாயிறு வகுப்­பு­க­ளுக்கு தடை

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில்¸ பாட­சாலை மாண­வர்கள் தனியார் வகுப்­பு­க­ளுக்குச் செல்­வதால் அவர்­களால் அற­நெ­றிப்­பா­ட­சாலை வகுப்­புக்­க­ளுக்குச் செல்ல முடி­வ­தில்லை. இத­ன­டிப்­ப­டையில்¸ விரைவில் ஞாயிற்­றுக்­கி­ழ­மை­தோறும் நடைபெறும் தனியார் வகுப்­புக்­க­ளுக்கு தடை­வ­ரலாம்.

இதற்­கான சுற்று நிரு­பங்கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. அவை விரைவில் வெளி­யி­டப்­படும் என புனர்­வாழ்வு¸ மீள் குடி­யேற்றம்¸ இந்து கலா­சார அபி­வி­ருத்தி¸ சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் செய­லாளர் பி.சுரேஸ் தெரி­வித்தார்.

அவர் இது­பற்றி மேலும் தெரி­விக்­கையில்¸ இந்த நாட்டின் பிர­ஜைகள் ஒவ்­வொ­ரு­வரும்¸ நல்­ல­வர்­க­ளா­கவும். கல்­வி­மான்­க­ளா­கவும் இருக்க வேண்டும் என்­பது எல்­லோ­ரது மன­தி­லு­முள்ள ஆசை­யாகும். இதற்­கான நல்ல பண்­பு­க­ளையும்¸ பழக்க வழக்­கங்­க­ளையும் இள­மை­யி­லி­ருந்தே வழங்­கு­கின்ற பணியை¸ இந்து சம­யத்தைப் பொறுத்­த­வரை அற­நெ­றிப்­பா­ட­சா­லைகள் செய்து வரு­கின்­றன. ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் தனியார் கல்வி நிலை­யங்­களில் வகுப்­புக்கள் நடை­பெ­று­வதால் மாண­வர்கள்¸ அற­நெ­றிப்­பா­ட­சா­லை­களை தவிர்த்து வரு­வ­தாக அறிக்­கைகள் காட்டுகின்றன. ஆதலால்¸ மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காக தனியார் வகுப்புக்களை தடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

பண்டிகை கால போக்குவரத்து சேவைகள் இன்றும் தொடர்கின்றது.!

பண்டிகைக் காலத்தையொட்டி இலங்கை போக்குவரத்து சபை மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளதுடன் விசேட ரயில் சேவைகளும் இடம்பெறவுள்ளன.

பண்டிகை காலத்தை முன்னிட்டு பெரும்பாலானோர் கொழும்பில் இருந்து தூர இடங்களுக்கு செல்வதற்கும் பின்னர் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கும் இந்த மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் இந்த பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்தின் சபையின் தலைவர் ரமால் சிறிவர்த்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிர­தான பத­விகள் 19 ஆம் திகதி

ஐக்­கிய தேசியக் கட்சி மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்­காக நிய­மிக்­கப்­பட்ட அர­சியல் சபை கடந்த வாரம் அல­ரி­மா­ளி­கையில் முதன்­மு­த­லாக கூடி­ய­துடன், அதில் கட்­சியின் பிர­தான பத­விகள் 19 ஆம் திகதி நிரப்­பப்­ப­டு­மெனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது .

இதன்­படி அன்­றைய தினம் இடம்­பெற்ற பதவி நிய­ம­னம்­பற்­றிய முடிவு ஐ.தே.கட்­சியின் மே தினக் கூட்­டத்தில் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் என அர­சியல் சபை வட்­டா­ரங்கள் தெரி­விக்­கின்­றன.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மறு­சீ­ர­மைப்­புக்­காக அதி­காரம் மிக்க அர­சியல் சபை­யொன்று கடந்த 7ஆம் திகதி இர­க­சிய வாக்­கெ­டுப்பின் மூலம் நிய­மிக்­கப்­பட்­டது. ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரே­ம­தாச மற்றும் உப தலைவர் ரவி கரு­ணா­நா­யக்க ஆகியோர் இச்­ச­பைக்கு பதவி வழி­யாக நிய­மனம் பெற்­றுள்­ளனர். அத்­துடன் நவீன் திசா­நா­யக்க, அகில விராஜ் காரி­ய­வசம், மங்­கள சம­ர­வீர, ரஞ்சித் மத்­தும பண்­டார, ஹரின் பெர்­னாண்டோ, ருவன் விஜே­வர்­தன, அஜித் பீ பெரேரா, இரான் விக்கிரமரட்ன, ஜே. சி. அலவத்துவல, நளீன் பண்டார, அசோக பிரியந்த ஆகியோரும் அரசியல் சபையில் அங்கம் வகிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − 10 =

*