;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (16.04.2018)

0

பொலிஸார் விடுத்துள்ள விஷேட ​அறிவுறுத்தல்..!!

தமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

கடந்த வருடம் இவ்வாறான 727 மரணங்கள் பதிவாகியிருந்தன. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதிக்குள் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கவனக் குறைவு காரணமாகவே உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் காலநிலை காரணமாக நீராடிக் கொண்டிருக்கும் போது ஒரேயடியாக பெரியளவில் நீர் வழிந்தோடி வரலாம். உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ள இடங்களில் மாத்திரம் நீராடுமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.

ஆபத்து எச்சரிக்கை தொடர்பில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் உள்ள ஆலேசனைகளை பின்பற்றுமாறும் மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் 94 உயிர்களையும், இந்த வருடம் 25 பேரையும் இலங்கை பொலிஸாரின் உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.

இளைஞர் ஒருவரை வெட்டிக் கொலை

வெலிகம, முதுகமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

வெட்டுக்காயங்களுடன் பாதையில் விழுந்திருந்த இளைஞனை இன்று அதிகாலை பொலிஸார் வலான வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முதுகமுவ பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் வெலிகம

சந்தேகத்திற்கிடமாக உயிரிழந்தவர் சடலமாக மீட்பு

மகரகம, பொரலஸ்கமுவ பகுதியில் குளத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரிற்கு கிடைத்த தகவலையடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பன்னிபிட்டிய, பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு சசடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மகரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twenty − 1 =

*