;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1.!! (17.04.2018)

0

நிக் பொதாஸ் இராஜினாமா

இலங்கை கிரிக்கட்டின் களத்தடுப்பு பயிற்சியாளராக பணியாற்றும் நிக் பொதாஸ் அந்தப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 13ம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பெற்றோல் விலை அதிகரிப்பு?

பெற்றொல் விலையை அதிகரிப்பது சம்பந்தமாக தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரத்தை அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்க உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை அதிகரித்த பின்னர் கனிய வள அபிவிருத்தி அமைச்சு, நாளொன்றுக்கு மேலதிகமாக 38 மில்லியன் ரூபா நட்டம் அடைந்ததாக அந்த அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க அத தெரணவிடம் கூறினார்.

இந்த நிலமை காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பெற்றோல் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சுக்கு கூட்டுத்தானம் அறிவித்திருந்தது.

இதனையடுத்து இது சம்பந்தமாக விலைச் சூத்திரம் ஒன்றை வகுப்பதற்கு நிதியமைச்சு நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அந்த சூத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தின் போது சமர்பிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

அதன்படி இந்த விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கினால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுக்கு அமைவாக இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நாட்டிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.

அதன்படி எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் எரிபொருள் விலை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக நிதியமைச்சின் பேச்சாளர் கூறினார்.

லண்டனிலிருந்து ஜனாதிபதி நாடுதிரும்பியதும் உடன்படிக்கையில் கைச்சாத்து : கிரியெல்ல

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனிலிருந்து நாடு திரும்பியதும் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் புதிய உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட உடன்படிக்கை அடுத்த இரண்டு வருடகாலத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய வேலைத்திட்டங்களை உள்ளடக்கியதாக காணப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் , இரு கட்சிகளும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களையும் புதிய உடன்படிக்கை கொண்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளை தவிர்ப்பதை நோக்கமாக கொண்டே புதிய உடன்படிக்கையை உருவாக்குவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கம் தொடரும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் , ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சரத் அமுனுகம குழுவினர் இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றும்போது பின்பற்றவேண்டிய விதிமுறைகளை உருவாக்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

பிணையில் விடுதலையானார் மகிந்தானந்த

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மஹிந்தானந்த அளுத்கமகே கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் நேற்று பிணை வழங்கிய போதும், பிணை நிபந்தனைகளை பூர்த்தி முடியாது போனதால் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

குறித்த பிணை நிபந்தனையை நிறைவேற்றிய பின்னர் அவர் இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகிந்தானந்த அளுத்கமகே விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில், லங்கா சதொச நிறுவனத்தால் கரம் போர்ட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 4 =

*