;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (17.04.2018)

0

காட்டு யானை தாக்கி இளைஞர் மரணம்

காட்டு யானை தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்றிரவு புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

புத்தளம் – அநுராதபுரம் வீதி வழியாக நேற்றிரவு 11.30 மணியளவில் சைக்கிளில் சென்ற இளைஞரையே காட்டு யானை தாக்கியுள்ளது.

குறித்த இளைஞர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் ; மஹிந்த ராஜபக்ஷ

நாட்டுக்கு நிரந்தரமான அரசை உருவாக்க வேண்டும் என்பதுடன் நாட்டுக்கு பொருத்தமான அரசியலை சூழலை உருவாக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியலில் சரிவு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் உறுதியற்ற தன்மை காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

இந்நிலையில் நாட்டில் முதலீடுசெய்வோருக்கு ஒரு நிலையான அரசாங்கம் அவசியம்.

நாட்டுக்கு பொருத்தமான அரசியலை நடைமுறைப்படுத்த பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெண்ணொருவர் சடலமாக மீட்பு

மாத்தறை, கொட்டவத்த பகுதியிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது.

திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இ.போ.ச பஸ்களால் 97 மில்லியன் வருமானம்

சித்திரைப் புதுவருட காலப்பகுதியில் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் மூலம் 97 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை இந்த வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் குறித்த காலப்பகுதியில் 85 மில்லியன் வருமானமே பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 + 6 =

*