;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (17.04.2018)

0

இன்று மாலை வேளை பல பிரதேசங்களில் மழை பெய்யலாம்

இன்று மாலை வேளையில் நாட்டின் பல பிரதேசங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யலாம் என்று வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் , வடமேல் , சப்ரகமுவ , தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் சில பிரதேசங்களில் கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் கடும் காற்று வீசக் கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக இடி மின்னல் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

இதேவேளை , காலியிலிருந்து மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிரதேசங்களில் மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ICTA தலைவராக பேராசிரியர் ரொஹான் சமராஜீவ

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சின் கீழ் இயங்குகின்ற தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கொள்கை தயாரிப்பு மற்றும் அபிவிருத்தி மூலோபாயங்களை செயற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு புதிய பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய பணிப்பாளர் சபையின் தலைவராக பேராசிரியர் ரொஹான் சமராஜீவ நியமிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் ரொஹான் சமராஜீவ தேசிய தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக இதற்கு முன்னர் பணியாற்றியுள்ளார்.

இன்று பிரித்தானிய பிரதமரை சந்திக்கும் ஜனாதிபதி

ரித்தானியாவில் இடம்பெறுகின்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரிட்டன் பிரதமர் தெரேசா மே இற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற உள்ளது.

அத்துடன் இந்த சந்திப்பின் பின்னர் லண்டனில் உள்ள இலங்கையர்களுடனான சந்திப்பிலும் ஜனாதிபதி ஈடபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுநலவாய நாடுகளின் வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு குழு எதிர்க்கட்சியுடன்?

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மேலும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்வதற்கு திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பின்னர் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

அதன்படி அவர்கள் அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளனர்.

இந்நிலையில் அத தெரண செய்திப் பிரிவுடன் பேசிய தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொண்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர உள்ளதாக கூறினார்.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர் விலகிக் கொண்டதன் காரணமாக தேசிய அரசாங்கம் மேலும் பலமடைந்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நலின் பண்டார கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − twelve =

*