;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (18.04.2018)

0

உண்மைகளை மறைத்து பொய்களை பரப்புவது எதிர்கால முன்னேற்றத்துக்கு பாதிப்பு

உண்மையை மறைத்து பொய்களை பரப்புவதற்கு சிலர் முயற்சிப்பது தாய்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு பாதிப்பாக அமைவதாக லண்டனில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாய்நாட்டின் உண்மையான நிலைமைகள் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி, நேற்று (17) லண்டனில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் உறுதிசெய்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கம் எடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றிய சரியான தகவல்கள் மக்களை சென்றடைவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் குறுகிய அரசியல் நோக்கம் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக உண்மையை மறைத்து பொய்களை வௌிப்படுத்த முயற்சிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் சகல துறைகளிலும் இருக்கின்ற சுதந்திரம் பற்றி அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில்

இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் மே மாதம் 02ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைதுசெய்யப்பட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்துவதற்கு தகுதியான நபர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்று விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க கூறினார்.

அவரை மீண்டும் எமது நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி என்ற வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இன்று இடம்பெற்ற உர மானியம் சம்பந்தமாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் கூறிய அவர்,

மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஒரு குடும்பமாக செயற்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை தட்டுப்பாடின்றி உரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிக விலைக்கு உர விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் தொடர்பில் விவசாய அமைச்சுக்கு அறிவிக்குமாறும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதியின் உரை ஆரம்பம்

லண்டனில் இடம்பெறுகின்ற பொதுநலவாய வர்த்தக மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது உரையாற்றிக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.

இதன்போது நிலைபேறான அபிவிருத்திக்காக வர்த்தக சமூகம் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 15ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − two =

*