;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4.!! (18.04.2018)

0

தங்கத்திற்கான தீர்வை வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15 வீத தீர்வை வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற தங்கம் மீது அதன் பெறுமதியில் இருந்து 15 வீத இறக்குமதி வரி அறவிடப்படுவதாக நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த இறக்குமதி வரி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பௌத்தகுருமாருக்கு வாக்குறுதி வழங்கி பிரதமர்

இலங்கை நல்லிணக்கம், சமாதானத்தை பலப்படுத்தும் புதிய நிகழ்ச்சிநிரலுடன் முன்னோக்கி செல்லும் என பிரதமர் ரணில்விக்கிரமசிங்க கண்டியில் பௌத்தமதகுருமாரிற்கு வாக்குறுதி வழங்கியுள்ளார்.

கண்டியில் இன்று பௌத்தபீடாதிபதிகளை சந்தித்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் எதிர்கால திட்டம் குறித்து பௌத்தமத தலைவர்களுடன் ஆராய்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய பல திட்டங்கள் மூலம் நன்மையை பெறுவதற்கான தருணம் இதுவென தெரிவித்துள்ள பிரதமர் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பல திட்டங்களை பூர்த்திசெய்ய உள்ளதாகவும் புதிய திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வெளிநாட்டு பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் நாட்டிற்கான புதிய திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் நாடு எதிர்நோக்கியுள்ள பல இயற்கை அனர்த்தங்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் இந்த வருடம் இயற்கை அனர்த்தங்களை சந்திக்காது என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவர் வீரா் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மயாகஸ்வாவிலிருந்து புத்தளத்தை நோக்கி இராணுவ வீரர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மயானத்திற்கு அருகிலிருந்த வளைவில் திரும்பியபோது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த இராணுவவீரர் சிகிச்சைக்காக அருகிலிருநு்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த இராணுவவீரர் 22 வயதுடையவரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 20 =

*