;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2.!! (19.04.2018)

0

முத்துராஜவல ஈர வலயம் வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு

முத்துராஜவல ஈரநில வலயத்தின் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சொந்தமான பகுதியை வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு வழங்குவது சம்பந்தமான இறுதி அறிக்கை எதிர்வரும் வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

அதன்பின்னர் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூறியுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் வௌியானதன் பின்னர் அந்த அதிகாரசபைக்கு சொந்தமான பகுதியை பாதுகாக்கப்பட்ட வலயமாக மாற்றும் சட்டபூர்வ அதிகாரம் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு கிடைக்கும்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் வலயத்தை வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு வழங்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தை அண்மையில் இடம்பெற்றுள்ளது.

காணி திணைக்களம், நில அளவைத் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆகிய அரச அதிகதாரிகளுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதன்படி இந்த ஆண்டின் இறுதிக்குள் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு சொந்தமான பாதுகாப்பட்ட பகுதி வனப் பாதுகாப்பு திணைக்களத்துக்கு உரிமையாவதுடன், அது வனஜீவராசிகள் வலயமாக பாதுகாக்கப்பட உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு இன்று மீண்டும் சந்திக்கிறது

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு குழு கூட்டம் இன்று மீண்டும் இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் 03.00 மணிக்கு அலரி மாளிகையில் இந்தக் கூட்டமத் இடம்பெற இருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கை சம்பந்தமாக யோசனைகளை முன்வைப்பதற்கு அந்தக் கட்சியின் 14 அமைச்சர்கள் உள்ளடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் முதலாவது கூட்டம் அண்மையில் இடம்பெற்றிருந்தமை கூறத்தக்கது.

23ம் திகதியின் பின் புதிய அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பம்

எதிர்வரும் 23ம் திகதியின் பின்னர் தமது புதிய அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை ஊடகங்களிடம் கூறினார்.

அடுத்துவரும் காலங்களில் தாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குழுவாக எதிர்க்கட்சியின் பொறுப்புக்களை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்

புத்தளம் – மன்னார் வீதிக்கு பூட்டு.!

எளுவன்குளம் பிரதேசம் நீரில் மூழ்கியுள்ளதால் புத்தளம் – மன்னார் பழைய வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவத்துள்ளது.

அங்கமுவ நீர்த்தேகத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + 7 =

*