;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.!! (19.04.2018)

0

உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றங்களை ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நாளை (20) நிறைவடைகிறது.

கடந்த மார்ச் 20ம் திகதி அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரண்டு உள்ளூராட்சி சபைகள் தவிர ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளினதும் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு கூறியுள்ளது.

அமர்வுகள் பிற்போடப்பட்ட ஹம்பாந்தோட்டை மாநகர சபை மற்றும் உறுப்பினர்கள் எண்ணிக்கையை வர்த்தமானியில் வௌியிட தாமதமான பூஜாபிட்டிய பிரதேச சபை ஆகியவற்றின் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகள் இதுவரை இடம்பெறவில்லை.

அந்த இரண்டு சபைகளுக்கும் மேலதிகமாக இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு கூறியுள்ளது.

பிரதி சபாநாயகர் முஜிபுர் ரஹ்மானா.?

பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் பதவிக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் 24 பேர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது அப்போது பிரதி சபாநாயகராக இருந்த திலங்க சுமதிபால பக்கசார்பான முறையில் நடந்துக்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குற்றம் சுமத்தி வந்தனர்.

இதனையடுத்து பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தனது பதவியை இராஜினாமா செய்தார். இந்நிலையில் தற்போது பிரதிசபாநாயகர் எவரும் நியமிக்கப்படவில்லை. எதிர்வரும் 8 ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும் போது பிரதி சபாநாயகர் ஒருவரை தெரிவு செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி பாராளுமன்றத்தின் 225 பேரின் விருப்பின் பிரகாரம் பிரதி சபாநாயகர் நியமிக்கப்படுவார்.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து தெரிவான முஜிபுர் ரஹ்மானை பிரதி சபாநாயகராக பதவிக்கு பரிந்துரை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் உட்பட ஒரு சில அமைச்சர்கள் 24 பேர் கையொப்பமிட்டு கடிதமொன்றை கையளித்துள்ளனர்.

இது தொடர்பில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானிடம் வினவிய போது,

பிரதி சபாநாயகர் பதவி தன்னை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியினர் பிரதமர் கடிதம் கையளித்துள்ளனர். எனினும் பிரதமர்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

புதிய அரசியல் பயணம் 23இல் ஆரம்பம்

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் தமது அடுத்தக் கட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்னர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து இந்தத்தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் நேற்றைய தினம் இதுத் தொடர்பில் முக்கிய கலந்துயாடல் ஒன்று நடைபெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றதோடு, தொடர்ந்து எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவி அர்ஜுணவுக்கு?

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு அர்ஜுண ரணதுங்கவை நியமிக்க அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்தலுக்கு அர்ஜுண ரணதுங்கவை நிறுத்தி அவரை வெற்றியடையச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

தற்போதைய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால மீண்டும் குறித்த பதவிக்காக போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 3 =

*